மஹிந்த ராஜபக்ஸவினர் நாட்டை சாப்பிட்டு, தற்போது உலகத்தை சாப்பிட முயற்சிக்கின்றனர் - மைத்திரிபால

Share it:
ad
பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு மகிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தின் வேட்பாளரால் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாது போனது.

இதன் மூலம் அரச தரப்பு வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் எந்தளவு தோல்வியான நிலையில் உள்ளது என்பது புலனாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் 6 மாதங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. அரசாங்கத்தில் இருந்ததால் எனக்கு அது பற்றி தெரியும்.

மூன்றாவது கால நோக்கு என்ற பெயரில் அதனை தயாரித்திருந்தனர். இந்த நிலையில், உலகை வெல்லும் வழி என்ற பெயரில் அதனை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் நாட்டை சாப்பிட்டு தற்போது உலகத்தை சாப்பிட முயற்சித்து வருகின்றனர் என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: