ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு தஹ்வா நிமித்தம் வருகை தந்திருந்த அஷ் ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) "சமகால உலகில் மஸ்ஜித்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் கிழக்கு லண்டன் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பள்ளிவாசலில் ( SLMC OF East London) சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
பெருந்திரளான மக்கள் அங்கே சமூகம் தந்து குறித்த சொற்பொழிவை செவியுற்று பெரும் பிரயோசனம் அடைந்து கொண்டனர். அங்கே சமகாலத்துக்கு பொருத்தமான சிறந்த கருத்துக்களை வழங்கிய ஷெய்க் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலில் ஆத்மீகம், கல்வி, ஒழுக்கம், மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்துறைகளிலும் மிகவும் அழகிய முன்மாதிரிகளுடன் சமூகத்தை வழிநடாத்தும் ஒரு கேந்திர நிலையமாக அன்றைய மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் இருந்தது என்பதை ஆதாரங்களோடு தெளிவு படுத்தியதுடன் இன்றைய எமது மஸ்ஜித்களும் அவ்வாறே பன்முகப் படுத்தப் பட்ட, பல் துறைகளிலும் முஸ்லிம் உம்மாவுக்கு வழிகாட்டக் கூடிய மர்கஸ்களாக, கேந்திர நிலையங்களாக மாற்றப் பட வேண்டும் என்பதை வழியுருத்தினார்கள்.
இறுதியாக பள்ளிவாசல்கல்களை நிர்வகிப்போரின் பொறுப்புக்கள் பற்றி தெழிவு படுத்தியதுடன் நிர்வாகத் தெரிவு முறையும் நிருவாகம் புரிவதும் எவ்வளவு பெரிய இரு அமானிதங்கள் என்பதை அழகிய முறையில் விளங்கப் படுத்தினார்கள். இஷாத் தொழுகையுடன் சுமார் 08. 00 மணியளவில் ஆரம்பமான சொற்பொழிவு நிகழ்ச்சி 09.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது.
Post A Comment:
0 comments: