ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி மகிந்த ராஜபசவிற்கு ஆதரவு அளித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில புதிதாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமய என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதோடு கட்சியின் சின்னம் தாமரை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பிரதான பொதுச் செயலாளராக இருந்த கம்மன்பில கடந்த 11 ஆம் திகதி விலகி ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்திருந்தார்.
எனினும் ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சியை ஏற்படுத்தி ஊழல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவென தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments: