''தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்'' மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad
“தங்கத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுறும் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கம் போன்ற தேசமொன்றை உருவாக்கித் தருவேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்குத் தமிழ் மக்களிடம் தெரிவித்தார்.

புலிகள் உங்களிடம் ஏமாற்றிப்பெற்றுக் கொண்ட தங்கத்தை நாம் அரசுடமையாக்கிக் கொண்டிருக்க முடியும். எனினும் நாம் அப்படிச் செய்யவில்லை. உங்கள் சொத்துக்களை மீள உங்களிடமே ஒப்படைத்துள்ளோம். அது உங்களுக்கு மகிழ்ச்சி தருவது போன்றே எங்க ளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்பது வருட யுத்தத்தில் பின்னடைவுகண்ட உங்கள் வாழ்க்கையை மென்மேலும் முன்னேற்றுவதே எங்களது நோக்கம். அதற்காகவே தெற்கைவிட அதிகமான நிதியை செலவிட்டு வடக்கை அபிவிருத்திக்கு உள்ளாக்கியுள்ளோம். உங்கள் முன்னேற்றத்துக் காக நான் மென்மேலும் உதவுவோம்.

நான் உங்கள் தோழன், நான் உங்கள் நண்பன், நான் உங்கள் உறவினன் உங்களை நான் நம்புகிறேன். என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம். எதுவித பேதங்களோ குறுகிய அரசியல் நோக்கங்களோ வேண்டாம். தவறான திசையில் பயணிக்க வேண்டாம்.

நான் உங்களைப் பாதுகாப்பேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானமும் அமைதியும், அபிவிருத்தியும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது வடக்கில் புலிகளின் வங்கிகளில் வடக்கு மக்கள் அடகுவைத்த நகைகள் இராணுவத்தினரின் உதவியுடன் மீளப்பெறப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களுக்குக் கையளிக்கப்பட்டது.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகை உரிமையாளர்களான வடக்கு மக்களுக்கு அந்த நகைகளைக் கையளித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எமில்டா சுகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

மூன்று தசாப்த கால யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நீங்களே. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள உங்களை அலரிமாளிகையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். முப்பது வருட துரதிஷ்டமான சூழ்நிலையை முடிவுக்குக்கொண்டுவருவதற்காக நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித் தோம். அந்தப் பிரயத்தனம் தோல்வியுற்ற நிலையிலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய நேரிட்டது.

எனினும், இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தம். புலிகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருந்தனர். அந்த நிலையிலிருந்து நாம் உங்களை மீட்டுள்ளோம். நீங்கள் கொழும்புக்கு இன்று யாழ் தேவி ரயிலில் வந்திருக்கிaர்கள் என நினைக்கின்றேன்.

நீண்டகாலத்திற்குப் பின் யாழ் தேவி ரயில் சேவையை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். யுத்தம் முடிவுற்ற பின் குறுகிய நான்கு வருடங்களுக்குள் நீங்கள் இழந்தவற்றை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம். மின்சாரம், வீதி, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் போன்றவற்றை மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

நீங்கள் யுத்தத்தில் இழந்தவற்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன். வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் போது வெளிநாட்டு நிபுணர்கள் அச்செயற்பாடுகளை நிறைவுசெய்துவிட்டு சுமார் 14 வருடங்கள் எடுக்கும் என்று தெரிவித்தனர். எனினும், நாம் எமது இராணுவத்தின் உதவியை நாடினோம். அதனால் குறுகிய நான்கு வருட காலத்துக்குள் கண்ணிவெடிகளை முழுமையாக எம்மால் அகற்ற முடிந்தது.

நாம் வடக்கை பாரிய அபிவிருத்திக்குள் ளாக்கி வருகின்றோம். 30 வருட அபிவிருத்தியின் பின்னடைவை சமப்படுத்த வே நாம் துரித அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திலும் நாம் உரிய கவனம் செலுத்தியுள் ளோம். அவர்களுக்கான கல்வி பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ள்ளதுடன், வடக்கில் மாத்திரம் 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைத்துக்கொடுத்துள்ளோம். உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் மட்டுமன்றி உலகளவில் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
Share it:

Post A Comment:

0 comments: