பயங்கரவாதத்தையும் பாதாள உலகத்தையும் வன்முறையையும் ஒழித்து தெற்காசியாவிலேயே சிறந்த நாடாகக் கட்யெழுப்பப்பட்டுள்ள இலங்கையை எதிர்காலத்திலும் பாதுகாப்பான நாடாகக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பான நாடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரும் தயாராகுவோம். 8 ம் திகதி உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இத் தொகுதியில் புதிய அமைப்பாளர் பிரதீப் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த. இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, எமக்கு ஆதரவு வழங்குவதற்காக அமெரிக்காவிலிருந்து எமது பெளத்த மத குரு ஒருவர் இங்கு வந்துள்ளார். கிருலப்பனை எனக்கு புதிதல்ல நான் பாடசாலை செல்லும் காலத்திலேயே இங்கு வந்து செல்வேன். பாமன்கடையில் எனக்கு தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் செல்வது வழக்கம். தனிப்பட்ட ரீதியில் இங்குள்ளவர்களை எனக்குத் தெரியும்.
நான் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். வீடுகள் உடைக்கப்பட்டால் அவ்விடத்திலேயே வசதியான மாடி வீடுகளைக் கட்டிக் கொடுப்போம் என்பது உறுதி. மக்கள் பொருளாதாரத்தில் மேம்படுத்தப்பட்டு வசதியான வீடுகளில் வாழ எனது காலத்திலேயே வழி வகுக்கப்படும்.
நாடும், மக்களும் அபிவிருத்தியடையும் யுகம் இது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தையும், வன்முறையையும் இல்லாதொழித்து பாதாள உலகத்தையும் இல்லாதொழித்துள்ளோம். இனி இந்த நாட்டை உங்கள் பிள்ளைகளுக்கு எற்றவாறு பாதுகாப்பான நாடாகக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு. பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக உருவாக்குவோம். பாதுகாப்பாக அனைத்து மக்களும் வாழவும், எங்கும் பயணிக்கவும் ஏற்ற நாட்டை உருவாக்கும் பயணத்தையே நாம் முன்னெடுத்துள்ளோம்.
நாம் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் இல்லாதொழித்தபோதும் இன்று அதன் நிழல்கள் சர்வதேசங்களில் செயற்படுகின்றன. வெளிநாட்டில் பாராளுமன்றத்தை அமைத்து அமைச்சரவையை நியமித்து பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்து தனியான அரசாங்கமொன்றை நடத்தி வருன்றனர். “அரசாங்கத்தைத் தோற்கடித்து அவரை எம்மிடம் அனுப்புங்கள்” என்று அவர்கள் கூறி வருகின்றனர். என்னை சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சாரக் கதிரையில் தண்டனை பெற்றுக் கொடுப்பதே அவர்களின் நோக்கம்.
இன்னொரு பக்கம் இங்குள்ளவர்கள் விமான நிலையத்தை மூடவும் கதைகளைக் கூறுகின்றனர். 8ம் திகதி இரவு 12.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போகின்றார்களாம். நான் இந்த நாட்டைக் கைவிட்டுப் போகப் போவதில்லை. நாம் இதைவிட பெரியவற்றைச் செய்துள்ளோம். அனைவரும் இப்போது சண்டியராகிவிட்டனர்.
இப்போது சிலர் வருவதும் போவதும் நடக்கின்றது. சிறிய சிலர் போயுள்ளனர். எமது செயலாளர் சென்றது எனக்கு சிறு மனக்கவலை தான் அதனை நான் வெளிக்காட்டவில்லை. இவர் போவதை நான் முன்பே அறிந்திருதேன். அப்பம் சாப்பிடும் போதே அது என்ககுத் தெரியும். நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அப்பம் சாப்பிட்டு அது ஜீரணிக்கும் முன்பே அவர் சென்று விட்டார். இது மனிதாபிமானத்தையும் அவமானமுமாகும்.
நாடு அபிவிருத்தியடைந்துள்ளது. இனி எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம். ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது தெற்காசியாவில் சிறந்த முன்னேற்றமடைந்துள்ள நாடாக இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலைமைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


.jpg)
Post A Comment:
0 comments: