அரசாங்கத்திற்கு செயற்படுபவர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்பு புலிகள் என்ற முத்திரையை பதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மாற்றுவதற்கு நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். புதிய அரசாங்கம் ஒன்றை தோற்றுவிப்பதற்காக நாங்கள் ஏன் கூடியுள்ளோம் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர், அரசாங்கத்தில் பல அமைச்சு பதவிகளை வகித்தவர் என நீங்கள் நினைக்கலாம். ஏன் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்று இருக்கும் போது ஏன் புதிய அரசாங்கம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டும்.
அதனால் ஒன்று கூறவேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சி இல்லை. அந்த கட்சி பெயரளவிலேயே, நாம பலகையை தாங்கிக் கொண்டிருக்கின்றது. நிலையான கொள்கையொன்றும் அவர்களிடம் இல்லை.
வெளிநாடுகளில் சென்று சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்த 5 வருடங்களில் நான் சிங்கப்பூருக்கு சென்ற காலம் கூட நினைவில் இல்லை.


.jpg)
Post A Comment:
0 comments: