''காஷ்மீரில் வாழும் நமது சகோதரர்களை, காப்பாற்ற செல்லும் உரிமை முஜாகிதீன்களுக்கு உண்டு''

Share it:
ad

பாகிஸ்தானில் உள்ள ஜமாத் – உத் – தவா என்ற அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். 

சமீபத்தில் லாகூரில் உள்ள மினார் – இ – பாகிஸ்தான் சதுக்கத்தில் ஜமாத் – உத் – தவா அமைப்பின் 2 நாள் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று ஹமீஸ் சயீத் பேசும் போது கூறியதாவது:–

காஷ்மீரில் இந்தியா அத்துமீறல் அதிகரித்துள்ளது. அங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, காஷ்மீர் மக்களை காப்பாற்றுவது பாகிஸ்தானின் கடமை, ஐ.நா.சபையின் தீர்மானப்படி காஷ்மீர் பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்கலாம் என இந்தியாவிடம் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவிக்க வேண்டும்.

இல்லையெனில் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் முழு ஆதரவையும் வழங்க வேண்டும். அன்பான வழியை இந்தியா புரிந்து கொள்ளாவிடில் காஷ்மீர் சுதந்திரத்துக்காக போராட வேண்டும்.

இதற்காக இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது. காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய ரத்தநாளம் போன்றது.

அமெரிக்காவுக்கு உதவ ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா படைகளை அனுப்பும் போது, காஷ்மீரில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற செல்லும் உரிமை முஜாகிதீன்களுக்கு உண்டு. காஷ்மீர் மக்களை காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது என்று பேசினான்.

பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட லஸ்கா இ – தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரும் இவன் தான். லாகூரில் நடந்த ஜமாத் – உத் – தவா மாநாட்டுக்கு பாகிஸ்தான் அரசு விசஷ ரெயில் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: