-அஸ்ரப் ஏ சமத்-
இன்று 28-12-2014 ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சி அழுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மற்றும் உதய கம்பண்வில முஸ்லீம் காங்கிரஸ் பற்றி தெரிவித்த கருத்து.
முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசாங்கத்தற்கோ மஹிந்த ராஜபக்சவின் கடந்த 2 ஜனாதிபதி வெற்றிக்கு ஆதரவளிக்காதவர்கள். இவர்கள் முதலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கும், அதன் பிறகு சரத்பொண்சேகாவுக்கு கடந்த முறை ஆதரவு தெரவித்தவர்கள். கடந்த முறை ஆணைச்சின்னத்தில் பாராளுமன்றத்தில் தேர்தலில் குதித்து ஆசனங்களைப் பெற்று ஜனாதிபதி வெற்றி பெற்றபின் அரசாங்கத்துடன் சேர்ந்தார்கள்.
அவர்கள் தணியானதொரு முஸ்லீம் பிரதேச செயலாளர்களைக் கொண்டதொரு நிருவாக மவாட்டம், அதில் நிலத்தொடர்பு காணிகள் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள் கொண்ட பல கோரிக்கையை ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடம் முன்வைத்தார்கள் கபிணட்டில் ஹக்கீம் சமர்ப்பித்த பத்திரிகை இதோ இதனை வாசித்து பாருங்கள். ; இதனை இந்த அரசாங்கம் வழங்கத்தயாரில்லை. அவர்கள் வழங்கிய கபிணட் பத்திரிகையையும் அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தார்.
அவ்வாறு வழங்கினால் விடுதலைப்புலிகள் வட கிழக்கை தணித்தனியாக பிரித்து தனி நாடு கேட்பது போன்றாகிவிடும். அதே போன்று முஸ்லீம் காங்கிரசும் பயங்கர அமைப்பாக மாறிவிடும். இனரீதியாகவோ மத ரீதியாக இந்த இலங்கையை நிர்வாகத்தை ஒருபோதும் பிரிக்காது ஒரு நாடு ஒரு மக்கள் என்ற மஹிந்த சிந்தனை திட்டத்தின் அப்பால் எம்மால் செல்ல முடியாது. அவ்வாறு வழங்கினால் பயங்கரவாதத்திற்கு துணைபேனதுபோன்றாதாகி விடும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
நாங்கள் கொடுக்க முடியாத இந்தக் கோரிக்கையை எதிர்அணிவேட்பாளர் மைத்திரி தருவாதாக சொல்லியதனால் தான் அவர்கள் அந்தப் பக்கம் போகியிருக்கின்றனர்.
முஸ்லீம் ஊடகவியாளர் - அவ்வாறனால் முஸ்லீம் காங்கிரசும் ஒரு பயங்கரவாத இயக்கமாகவாக நீங்கள் சொல்கின்றீர்கள்.
அமைச்சர் - இல்லை நான் அவ்வாறு சொல்லவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் ஒரு கட்சி அவர்களது நிகழ்ச்சிநிரலுக்கமைய அவர்கள் செயல்படுகின்றார்கள.
ஊடகவியலாளர் சற்றுமுன் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு பிரிவான இயக்கமாக முஸ்லீம் காங்கிரசை நீங்கள் சொன்னீர்கள். எனது போணில் நான் ஒலிப்பதிவு செய்துள்ளேன்.
அமைச்சர் நான் சொல்லவில்லை. நீங்கள் அதனைத் திருத்திக் கொள்ளுங்கள்.
ஊடகவியலாளர் - உங்கள் பக்ககம் பொதுபலசேனா இருப்பதானால் தான் அந்தப் பக்கம் சென்றார்கள்
ஆமைச்சர் இல்லை அந்தப் பக்கம் முஸ்லீம்களுக்கு பெரும் விரேதமான ஹாலால் பிரச்சினை மற்றும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் எதிர்ப்பு தெரிவித்த கெல உருமய பாட்டிலி சம்பிகக, ரத்னதேரோ உள்ளனர். அதுவும் அவர்கள் அரசியல் கட்சி ஒன்று என அமைச்சர் சுசில பதிலளித்தார்.


.jpg)
Post A Comment:
0 comments: