மஹிந்தவும், மைத்திரியும் இன்று நேருக்குநேர் பார்த்துக்கொள்வார்கள்..!

Share it:
ad

நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் இன்று திங்கட்கிழமை காலை  9.00  மணிமுதல்  11.00 மணிவரை இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் செய்யப்படவுள்ளன.  

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய  முன்னிலையில் நடைபெறும் வேட்புத் தாக்கலின்போது  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பிரசன்னமாகவுள்ளனர். 

 நேருக்கு நேர் சந்திப்பு 

இன்றைய  வேட்பு மனுத்தாக்கலின்போது  ஐககிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணியின் பொது வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன ஆகியோர்  நேருக்குநேர் சந்தித்துக்கொள்ளவுள்ளனர். 

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்     நோக்கில்   19 பேர் தேர்தல்   செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன்  17 பேர் அரசியல் கட்சிகள்  சார்பிலும்  2 பேர் சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும்   களத்தில் இறங்கியுள்ளனர்.   இவர்கள் அனைவரும் இன்று  வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.  

9.30 முதல் ஆட்சேபனை   

இந்நிலையில்  காலை 9 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல்  ஆரம்பமாகவுள்ளதுடன் 11  மணிக்கு நிறைவடையவுள்ளது.   எனினும் காலை   9.30 மணியிலிருந்து  11.30 மணிவரை    ஆட்சேபனை தெரிவிப்பதற்கான  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.    இந்த நேரத்தில்  வேட்பாளர்களின்  வேட்பு மனுக்கள் தொடர்பில்  ஆட்சேபனை  தெரிவிக்கப்படும் பட்சத்தில்  அது தொடர்பில் தேர்தல்  ஆணையாளர்  ஆராய்வார்.  

Share it:

Post A Comment:

0 comments: