மஹிந்த ராஜபக்ஸ வரலாற்று துரோகம் செய்வாரா..? கல்முனை பிரிக்கப்படுமா..??

Share it:
ad
அம்பாறை கல்முனை தேர்தல் தொகுதியின் சில பகுதிகளை சாய்தமருதுடன் இணைப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினா ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் 17 ஆம் திகதி அதிகாலை வேளையில் தொலைபேசி மூலமாக கவலை வெளியிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்காவிட்டால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து கல்முனையின் சில பகுதிகள் சாய்தமருதுடன் இணைக்கப்படும் சிறப்பு அறிவிப்பு வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்முனையை இவ்வாறு இருகூறாக்கினால் அது, கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் வரலாற்று துரோகமெனவும் முஸ்லிம் காங்கிரஸின் அந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

கல்முனையை பிரித்து, சாய்தமருதுடன் இணைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம் அமைச்சரான  அரசியல்வாதி ஒருவரும், மற்றுமொரு இளம் அரசியல்வாதியும் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் அந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. கூறினார்.
Share it:

Post A Comment:

0 comments: