இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மீதான தடை எந்தவித நிபந்தனையுமின்றி அகற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன தலைவரும், பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளரும், முஸ்லிம் சம்மேளன முக்கியஸ்தருமான சத்தார் குறிப்பிட்டார்.
இதையடுத்து சிறிலங்கா டெலிகொம் மூலம் ஜப்னா முஸ்லிம் இணையத்தை இலங்கையர்கள் நேரடியாக பார்வையிடமுடியும்.
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனும் இதனை சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதேவேளை இலங்கையயில் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் தடை நீக்கப்பட வேண்டுமென குரல் கொடுத்த எமது வாசகர்கள், பிரார்த்தனையில ஈடுபட்ட உறவுகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகப் பிரமுகர்கள், இலக்கிய நண்பர்கள், ஊடகவியலாளர்கள் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட சகல தரப்புகளுக்கும் ஜப்னா முஸ்லிம் இணையம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹ்வின் உதவியுடனும், வாசகர்களின் ஒத்துழைப்புடனும் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்ந்து ஊடகவியல் ஒழுக்கத்தை பின்பற்றி, நடுநிலையாக, துணிச்சலுடன், முஸ்லிம் சமூகத்தின் குரலாக தொடர்ந்து பயணிக்கும்.
முக்கிய குறிப்பு - இலங்கையில் எந்தப்பகுதியிலேனும் ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதில் சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டால் அதுகுறித்து வாசகர்கள் எமக்கு அறிவிக்கலாம்.
முக்கிய குறிப்பு - இலங்கையில் எந்தப்பகுதியிலேனும் ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதில் சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டால் அதுகுறித்து வாசகர்கள் எமக்கு அறிவிக்கலாம்.


.jpg)

Post A Comment:
0 comments: