மு.கா.வின் தீர்மானம் மக்களின் தீர்ப்பாய் அமையுமா..?

Share it:
ad
(ஸக்கி இஸ்மாயில்)

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பது 8 உறுப்பினர்களை பாரளுமன்றத்தில் கொண்டுள்ள முஸ்லிம்களை பிரதிநதித்துவப் படுத்துகின்ற அரசியல் கட்சியாகும். இக்கட்சியே பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கொண்டு காணப்படுவதற்கான கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சனாதிபதி தேர்தல் குறித்து இக்கட்சியானது இன்னும் தீர்மானம் மேற்கொள்வதில் பின்நின்றே வருகின்றது.

எதிர்வருகின்ற சனாதிபதி தேர்தலில் எந்த சனாதிபதி அபேட்சகருக்கு இக்கட்சி தனது ஆதரவினை வெளிக்காட்டும் என்பது குறித்து ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் அக்கட்சியின் தலைவரினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அக்கட்சி எதிர்வருகின்ற தேர்தலில் தற்போதைய சனாதிபதி ராசபக்சவுக்கே தனது ஆதரவினை வழங்கும் என பலர் எதிர்வு கூறுகின்றனர். அவ்வறிக்கையில் தற்போதைய அரசாங்கத்துடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளது எனவும் அதன் மூலம் அக்கட்சியின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தற்போது செவிசாயத்துள்ளது என்பதுடன் அவற்றை விரைவில் நிறைவு செய்யவும் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசானது தற்போதைய சனாதிக்கு தாம் வழங்கவிருக்கின்ற ஆதரவினை சமிக்கை மூலம் அறிவிப்பதாகவே இவ்வறிக்கை பலராலும் நோக்கப்படுகின்றது.

எனினும், அக்கட்சி எதிர்வருகின்ற சனாதிபதி தேர்தல் குறித்து தமது சிரேஸ்ட அங்கத்தவர்களுள் பல்வேறு கோணலான கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. எனவே, தங்களுக்குள் பிளவுகள் உண்டாவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக சிலவேளை அவர்கள் இத்தேர்தலில் எவருக்கும் தமது ஆதரவினை வெளிக்காட்டாது மௌனம் சாதிக்கலாம். மறுபுறத்தில் இக்கட்சி பொது வேட்பாளருக்கு தமது ஆதரவினை வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் இல்லாமலில்லை. எதிர்வருகின்ற தேர்தல் குறித்து இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமது எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களினையும் வெளிக்காட்டாமையினால் முஸ்லிம்கள் மத்தியில் நிலமை இன்னும் மூடு பனியாகவே இருந்து வருகின்றது. அக்கட்சியின் சிரேட்ட அங்கத்தவர்களுள் காணப்படுகின்ற பல்வேறு கோணலான கருத்துக்களினாலேயே அக்கட்சி சுனாதிபதி தேர்தலில் யாருக்கு தாம் ஆதரவினை வழங்குவது என தீர்மானம் மேற்கொள்ள நாட்களாகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நுண்ணி ஆராந்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. அக்கட்சியானது எந்த சனாதிபதி அபேட்சகரினது நன்மதிப்பினை வெல்லலாம் என்பதிலும் பார்க்க கட்சியின் அங்கத்தவர்களை வெற்றி கொள்ளும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் என்போர் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்களுடைய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்களின் அபிப்பிராயங்களையும் கோரிக்கைகளையும் மதிப்பதாய் அமைய வேண்டும். குறிப்பாக சிறு இனக் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் கட்சிகள் எப்போதும் தங்களுக்கு வாக்களிக்கின்ற மக்களின் தீர்மானங்களையே தமது தீர்மானங்களாக சனாதிபதி தேர்தலில் வெளிப்படுத்தல் வேண்டும். சிலவேளை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்கின்ற தீர்மானம் சரியானதாக இருக்கலாம் ஆனால் மக்கள் கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு அவை தீர்வாக அமையாது. அத்தகைய தீர்மானத்தினால் மக்களை ஆற்றுப்படுத்தவும் முடியாது. ஈற்றில் அவர்கள் மேற்கொள்கின்ற தீர்மானம் மக்களின் விருப்பிற்கு எதிராக அமையுமெனில் அவர்கள் வாக்காளர் பெருமக்களின் ஆதரவினை இழக்க நேரிடும். இதனால் அவர்கள் தற்போது அரசியல் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து ஆராய்வதனை விடுத்தும் இத்தருணத்தில் மக்களின் இதயத் துடிப்பினை நன்கு கற்றுக்கொள்ளவும் ஆராயவும் முற்பட வேண்டும்.

அதனைவிடுத்து முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற தேர்தலில் எந்த அபேட்சகர் வெல்லப் போகின்றார், அதற்கான சூழ்நிலைக் கனதி எவரின் பக்கமுள்ளது என்பது பற்றியெல்லாம் பகுப்பாய்வு மேற்கொண்டால் ஈற்றில் அவர்களுடைய கட்சியின் பலம் ஆட்டம் காணும் நிலை தோன்றும். இங்கு மக்கள் தேர்வு செய்து கொண்ட அபேட்சகர் இத்தேர்தலில் வெல்வாரா அல்லது தோற்பாரா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. கட்சிய ஆராய வேண்டிது மக்களின் இதயத்தினை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதனை மட்டும்தான். முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் மக்களின் அபிப்பிராங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுவே எதிர்வருகின்ற 2015ம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் மதிப்பினையும் ஆதரவினையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற கட்சியானது தமது மக்களின் நலன்களையும் அபிப்பிராயங்களையும் ஆராய்ந்து சுதந்திரமாக தீர்மானங்களை மேற்கொள்கின்ற கட்சியாக திகழ வேண்டும். எதிர்வருகின்ற தேர்தலில் இரு அபேட்சகர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்பது நாம் அறிந்த விடயம். இருப்பினும், எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தினை இழக்கும் எனில் அப்போது சனாதிபதியாக இருக்கின்ற நபர் இக்கட்சியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத நிலை ஏற்படும். இதனால் இக்கட்சி மேலும் ஒரு தேர்தலுக்காக காத்திருக்க வேண்டிய நிலமை மாறும். ஆகவே, வெற்றி பெறவிருக்கின்ற அபேட்சகர் யாராக இருப்பார் என ஆராய்ந்து வருந்துவதனை விடுத்தும் தற்போது கட்சி நன்கு சிந்தித்து அறிவார்த்தமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லாவிடில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் வாக்களர் பெருமக்களுக்கும் இடையில் மேலும் இடைவெளி அதிகரிக்கும். இந்நிலைமை கட்சியினதும் அதன் அங்கத்தவர்களினதும் எதிர்காலம் குறித்த அரசியல் கனவுகளை பாழாக்கும் என்பதுடன் கட்சியின் அரசியல் எதிர்காலத்தினை கேள்விக் குறியாக்கும்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகும். அக்கட்சி சனாதிபதி தேர்தல் குறித்த தனது தீர்மனத்தினை மிக விரைவில் அறிவிக்க இருக்கின்றது. இலங்கை பாராளுமன்றில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். ஆவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற தீர்மானம் என்பது தற்போதைய அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்கட்சி அரசாங்கத்தினை விட்டும் விலக்கிக் கொள்ள தீர்மானித்தால் அது அரசாங்கத்தின் தற்போதைய பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்க செய்துவிடும். இந்நடவடிக்கை மேலும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அதிருப்தியுற்றிருக்கின்ற ஆதரவாளர்களும் தமது ஆதரவினை கைவாங்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

Share it:

Post A Comment:

0 comments: