நிந்தவூர் ஜமாத்தே இஸ்லாமி கிளையினரால் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று கமு/அரபா வித்தியாலயத்தில் இன்று 2014 DEC 28TH ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்காக பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
9 மணியில் இருந்து பிற்பகல் 2 வரை நடைபெற்ற இம்முகாமில் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண் பெண், சிறுவர் போன்ற நோயாளர்கள் இங்கு சிகிச்சை பெற்றனர்,குருதியில் சீனிக்கான பரிசோதனையும் செய்யப்பட்டது..அடைமழையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இந்த மருத்துவச்சிகிச்சை முகாம் மிகவும் பலனுள்ளது என்று இங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் கருத்துத்தெரிவித்தனர்,
இந்நிகழ்வில் பிரதேச வைத்தியர்களும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்களும், தொண்டர்களும் உதவிகள் புரிந்தனர். ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அணியினரும் தமது பங்களிப்பினை செலுத்தினர்.





Post A Comment:
0 comments: