எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். பொதுவான காரணங்களை இதற்கு சொல்ல முடியாது. தென்பகுதி வாக்குகளைப் பாதுகாப்பதற்காகவே ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
தமிழ் வாக்குக்களை வெல்லுவதற்காக மைத்திரிக்கு ஆதரவு என அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரியை ஆதரிக்கும் கூட்டமைப்பு ஏன் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது,
கேள்வி:- ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- ஜனாதிபதி வெற்றிபெறுவார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை. மக்கள் இதனை மறந்துவிடக்கூடாது.
கேள்வி:- மைத்திரியை ஆதரிக்கும் முடிவடை அறிவிக்கும் போது சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதாக கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் உங்களின் பதில் என்ன?
பதில் :- 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கேலிக்குரியதாகும்.
கேள்வி:- அரசாங்கத்தில் அங்கம் வகித்த ரிஷாத் பதியுதீனின் கட்சி விலகி எதிரணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்.?
பதில்:- ரிஷாத் பதியுதீன் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ன நிலைப்பாடு எடுக்கவுள்ளது. வன்னிப்பகுதியில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் தமிழர்களது காணிகள், சுவீகரிக்கப்பட்டதாகவும், இவரினால் முஸ்லிம்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. மீன்படி தொழிலுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இப்போது ரிஷாத் எதிரணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் முஸ்லிம்களின் குடியேற்றத்தை நிறுத்துமாறு கூட்டமைப்பு மைத்திரியிடம் கோருமா? சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள வழங்குமாறு கூட்டமைப்பு கூற முடியுமா?
ஜனாதிபதியுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. இன்று மைத்திரியிடம் அவர் சென்ற பின் அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விட்டதா?
கூட்டமைப்பு இந்த விடயத்தில் என்ன செய்யப் போகின்றது. இதற்கு கூட்டமைப்பு பதலளிக்கவேண்டும். கிழக்கில் அம்பாறையிலும தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஹக்கீம், தற்போது எதிரணியில் நிற்கின்றார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது. மட்டக்களப்பிலும் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. இதனை கூட்டமைப்பினரால் மீளப்பெற முடியுமா?
ஜனாதிபதியுடன் இருக்கும் போது இவர்கள் கெட்டவர்களாக இருந்தனர். தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா? இது குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.


.jpg)
Post A Comment:
0 comments: