சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரி + ரணில் - ஞானசாரர்

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டின் பாதாளத்தில் தள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டார நாயக்க குமாரதுங்க செயற்படுகின்றார் என தெரிவித்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடிக்கின்றனர் என்றார்.

கொழும்பில் இன்று 2-12-2014  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழங்குவது எமது நோக்கமல்ல. நாட்டின் தேசிய பாதுபாப்பு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம். வெளிநாட்டின் சூழ்ச்சிகளுக்கு அமைய வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றார். எனவே இதற்கு ஒருபோதும் இடமளியோம் என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: