ராணுவ வீரரை திருமணம் செய்ததால், பெஷாவரில் பள்ளி முதல்வரை கொன்ற தற்கொலைப்படைதாரி

Share it:
ad
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்கவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 132 பள்ளி குழந்தைகள் உள்பட 145 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பள்ளியின் முதல்வரை கொல்லும் நோக்கில் தற்கொலைப்படைவாதி அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ படைத்தளபதியை திருமணம் செய்து கொண்டதால் அப்பள்ளியின் முதல்வரை குறிவைத்து தற்கொலைப்படையாக மாறி தன்னையும் மாய்த்துக்கொண்டவாதி அவரையும் தீப்பற்றி இறக்கச்செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அப்பள்ளி முதல்வரான தாஹிரா குவாசி, முன்னாள் ராணுவ படைத்தளபதியான குவாசி சபருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ராணுவ தளபதியை திருமணம் செய்ததற்காகவே அவரை வாதிகள் குறிவைத்து கொன்றுள்ளனர். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை வாதி வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் அந்த அறையே முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்துள்ள புகைப்பட காட்சிகள் வெளிவந்துள்ளன. குவாசி கொல்லப்பட்டதை ராணுவ செய்தி தொடர்பாளரான அசிம் பஜ்வாவும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: