நல்லாட்சி இல்லையென்று கூறி, குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் அர்த்தம் இல்லை - கோட்டா

Share it:
ad
நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படாமையினால், இன்று நாட்டின் நல்லாட்சி சீர்குலைந்துள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் வேலைத்திட்டங்கள், சரியான திட்டமிடலின் கீழ் கொண்டுசெல்வதன் மூலமே நல்லாட்சியை ஏற்படுத்த முடியும். நல்லாட்சி இல்லை என்று கூறி, அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் எவ்வித அர்த்தமும் இல்லை' என அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் நல்லாட்சி சீர்குலைந்தமைக்கு பயங்கரவாதமே பிரதான காரணமாக அமைந்தது. அரச மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார். 
Share it:

Post A Comment:

0 comments: