இங்கிலாந்து உள்ளிட்ட ஐரேர்பிய நாடுகளில் பனிக்காலம் துவங்கி உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பனி பொழிந்து வருகிறது. விமானம் மற்றும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இங்கிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் பனிக் காலம் துவங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு பனி மழை பெய்து வருகிறது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனியால் மூடப்பட்டு உள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. யோர்க்ஷயர், லிவர்பூல் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகின்றன. ஓடுபாதைகளில் பனி படர்ந்து கிடப்பதால், விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்படுகிறது. பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது பனி படர்ந்து கிடக்கிறது. இதை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை நேரத்தில் மிக அதிகமாக பனி பொழிவதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உள்ளது. கடும் பனிப்பொழிவால் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அடுத்த வாரம் இதைவிட அதிக பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கூறி உள்ளனர். அதற்கேற்ப பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.



Post A Comment:
0 comments: