பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ரானாயூசுப். கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாளன்று போலீசாருக்கு தனது நண்பர் செல்போன் மூலம் பேசினர்.
அப்போது முல்தானில் உள்ள மார்க்கெட் மற்றும் குழந்தைகள் பூங்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறினார்.
இதனால் பதட்டமும் பரபரப்பும் எற்பட்டது. உடனே வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மார்க்கெட் மற்றும் பூங்காவில் கடும் சோதனை நடத்தப்பட்டது.
வெடி குண்டுகள் எதுவும் இல்லாததால் அவை வெறும் புரளி என தெரிய வந்தது. அதை தொடர்ந்து ரானாயூசுப்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது நண்பரின் வியாபார எதிரியை பழி வாங்கவே இவ்வாறு செய்ததாக கூறினார்.
இதற்கிடையே, இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 26 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


.jpg)
Post A Comment:
0 comments: