தேம்பி தேம்பி அழுத மலாலா

Share it:
ad

நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற நோபல் பரிசு விழா கண்காட்சியில், பாக். சிறுமி மலாலாவின் ரத்தக்கறை படிந்த சீருடை பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவரை நினைத்து தலைவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா, நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் 10ம் தேதி நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 60 வயதான கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானை சேர்ந்த 17 வயதான மலாலா யூசுப்சாயும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர். இந்தியாவில் குழந்தைகளின் கல்வி, குழந்தை தொழிலாளர் முறையை நீக்குதல் மற்றும் உரிமைகளை நிலைநாட்டுதல் தொடர்பாக கைலாஷ் சத்யார்த்தி சமூகசேவை நிறுவனம் மூலம் பாடுபட்டு வருகிறார். அதேபோல்,  மலாலா பாடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மலாலா பள்ளிக்கு செல்லும் போது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் ஒரு குண்டு மலாலாவின் தலையில் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்தபடி பெண் கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆஸ்லோ நகரில் நடந்த கண்காட்சியில் பாகிஸ்தானில் மலாலா சுடப்பட்ட போது அணிந்திருந்த பள்ளி சீருடை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதைக் கண்டதும் மலாலா தேம்பி தேம்பி அழுதார். கைலாஷ் சத்யார்த்தி அவரை கட்டியணைத்து தலையில் முத்தமிட்டார். ‘நீ என் மகள். நீ மிகவும் தைரியமான பெண். நீ அழக்கூடாது. இதுபோன்ற சவால்களை எல்லாம் தைரியமாக எதிர்த்து போரிட வேண்டும்‘ என்று ஆறுதல் கூறினார். இதைப் பார்த்து அங்கிருந்த பல்வேறு நாட்டு தலைவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 
Share it:

Post A Comment:

0 comments: