படையினர் எவரும் அதிகாரங்களை மீறி செயற்படவில்லை - பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

Share it:
ad
-ஸாதிக் ஷிஹான்-

படையினர் தமது அதிகாரங்களுக்கு அப்பாற் சென்று பாதுகாப்பு தவிர்ந்த வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள் விளம்பரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜனாதிபதி தொடக்கம் சாதாரண பாதுகாப்பு வீரர் வரை சகல சந்தர்ப் பங்களிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கியே செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முப்படை வீரர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் பொய்யான குற்றச்சாட்டுக்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.

பிரிகேடியர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில், நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த படைவீரர்களையே பயன்படுத்துவதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

யுத்தத்திற்கு பிறகு தொழில் ரீதியாக நிர்மாண துறை நடவடிக்கைகளுக்கென மாத்திரம் 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். யுத்தத்திற்கு பங்களிப்பு செய்த அதிகாரிகள் இந்த திட்டங்களின் பொறுப்பாளர்களாகவே செயற்படுகின்றனர்.

அதேபோன்று மேற்படி விளம்பரத்தில் கதைப்பவரோ, படங்களில் தோன்றுபவரோ உண்மையான பாதுகாப்பு படைவீரர் அல்ல மாறாக நடிகர் என்பதை தான் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய் நாட்டிற்கு எதிராக வெளிநாடுகளிலிருந்து வரும் அழுத்தங்களை முறியடித்தல், உள்ளூரில் ஏற்படும் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பாக செயற்படுதல் என்பன பாதுகாப்பு படையினரின் பிரதான பணிகளில் ஒன்றாக அந்த அடிப்படையிலேயே அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இதனை எவரும் தவறு என்று கூற முடியாது.

அதேபோன்று இராணுவத்தின் சம்பளம், அத்துடன் வழங்கப்படுகின்ற விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் கொடுப் பனவுகள் தொடர்பிலும் இராணுவத் தளபதி ஒரு சிலருக்கு சார்பாக செயற் படுவதாகவும் சிலர் குற்றஞ்சாட்டுக் கின்றனர் என்று தெரிவித்த அவர் அவற்றில் எவ் வித உண்மையும் கிடையாது.

ஏனெனில் இராணுவத்தின் சம்பள பிரிவினர் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகின்ற சம்பள துண்டுடன் இராணுவத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் ஒன்றையும் இணைத்து அனுப்புகின்றனர். இந்த நடவடிக்கை ஒரு வருடத்திற்கு முன் இருந்து நடை முறையிலுள்ள ஒன்றாகும் மாறாக தற் பொழுது புதிதாகவோ அல்லது எவருக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல என்றார்.

அதேபோன்று ஜனாதிபதி தொடக்கம் சாதாரண படைவீரர் வரை நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளித்து சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வருகின்றனர். எனவே தான் ஒவ்வொரு புதன் கிழமைகளில் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டமும், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், புலனாய்வு அதிகாரிகள் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகளின் விசேட கூட்டம் நடத்தப்படுகிறது.

இதேவேளை, படைவீரர்களுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனவரிக்கு பிறகு புதிதான விசாரணை குழு ஒன்று நியமிக்கப்படும் என்று சிலர் கூறுகின்றனர். இது தொடர்பில் உங்களது கருத்து என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர்,

அவ்வாறு எந்தவொரு விசாரணைக் குழுவும் புதிதாக தேவைப்படாது ஏனெனில் இது தொடர்பில் உள்நாட்டில் எவரும் கோரவில்லை மாறாக வெளி நாடுகளே கோரிக்கைகளை விடுத்து வருகின்றது. எவ்வாறாயினும் சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலைமையை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி விசேட ஆணைக் குழுவை நியமித்து அந்த குழு தற்பொழுது தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: