'நாளை துவங்கும் ஜனாதிபதி ஆட்டம்' மஹிந்தவிடமுள்ள பைல்களும், மக்களிடமுள்ள பைல்களும்!

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

இன்று வழக்கிலுள்ள இந்த நடைமுறையை நோக்குகின்ற போது குடிகள் ஏமாளிகள் அரசியல் வாதிகள் எல்லோரும் புத்திசாலிகள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மக்கள் மந்தைகள் அரசியல்வாதிகள் மேய்ப்பாளர்கள்.

சரி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வியாபாரத்தைப் பண்ணிக் கொண்டு போங்கள் நாங்களும் எங்கள் தொழிலை செய்து கொண்டு இருக்கின்றோம். நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்பு மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகின்ற தினம். அந்தத் தீர்ப்புடன் கடைசி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வெற்றியாளர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஆணையாளர் கனிசமான பங்களிப்பை இந்தத் தேர்தலில் செய்ய வேண்டி இருக்கின்து. 

தற்போது நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை எப்படி நிறைவேற்ற முடியும் என்ற விடயத்தில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. வழக்கம் போல் பொலிஸ் பார்க்க வேண்டிய வேலைகளை நான் செய்ய வேண்டும் என்று எவரும் என்னிடத்தில் எதிர்பார்க்க வேண்டாம். நீதி மன்றம் போய் சட்டம் பேசி சட்டத்தை நிலை நாட்டிக் கொள்ளுங்கள்  என்று இந்தத் தேர்தலிலும் ஆணையாளர் நடந்து கொள்வார் என்றால் இந்தத்; தேர்தலில் நெருக்கடிகள் தோன்ற இடமிருக்கின்றது.  

மஹிந்த - மைத்திரி அணிகளில் ஏதாவது ஒன்றுதான் ஜனாதிபதி ஆசனத்தை வெல்லப் போகின்றது என்று தெரிந்தாலும் இன்னும் பல சில்லறைகளும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றது. அவர்களது கொள்கைகள் கேட்பாடுகளைப் பற்றி மக்கள் தூசுக்காவது கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியான வேட்பளர்களுக்கு வேண்டுமானால் ஊடகங்களில் தமது முகம்களை இந்தச் சந்தர்ப்தில் காட்சிப் படுத்திக் கொள்ள மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

2015 ஜனவரி 8ம் திகதி நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த - மைத்திரி பலப்பரீட்சையாக இருந்தாலும் தேர்தலில் மைத்திரி ஜெயித்தால் சுதந்திரக் கட்சியின் ஆதிக்கத்தை சந்திரிகா சுலபமாகக் கைப்பற்றிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியும். மைத்திரியுடன் வர இருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்னும் அச்சம் பயம் காரணமாக ஆளும் தரப்பில் பணத்துக்காகவும் பைல்களுக்காகவும் தொங்கிக் கொண்டு இருந்தாலும் பல்வேறு வகையில் அவர்கள் இன்னும் சந்திரிகாவுடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டில் இன மத பேதங்கள் ஏற்பட இடம் வைக்கக் கூடாது நீங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும். எனவே இன மத பேதங்கள் கொடூரமானது அதனைத் தகர்த்தெரியுங்கள். அண்மையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகி இருக்கின்ற மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் நிதியை வழங்கி வைக்கின்ற வைபத்தில் பேசும் போது ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ அப்படித் தெரிவித்திருக்கின்றார்.

நாடு பூராவும் போகின்ற பார்க்கின்ற இடங்களில் எல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்டவுட்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. சில தினங்களுக்கு முன்னர் திவுலப்பிட்டியாவில் தனது வீட்டிற்கு முன்னால் ஜனாதிபதியின் கட் அவுட் நிறுவப்போன இடத்தில் வீட்டு உரிமயாளர் அதற்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டபோது அந்த வீட்டுக்கார்களை கட்டவுட் வைக்கப் போனவர்கள் தாக்கிக் காயப்படுத்தி இருப்பதுடன் அவர்களை வைத்திய சாலையிலிருந்தும் வெளியேருமாறு அச்சுறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறி இருக்கின்றார்கள்.  

மக்கள் இதயத்தில் நான் தற்போது குடிபுகுந்து இருக்கின்றேன் எனவே  எனக்கு கட்டவுட் போஸ்டர்கள் அவசியப்பட மாட்டாது என்று எதிரணி பொது வேட்பாளர் மைத்திரி கூறி இருக்கின்றார். அத்துடன் யாராவது இந்த கட்அவுட் போஸ்டர்கள் போட எனக்குப் பணம் தந்தால் அதனை சிறுநீரகம் பாதிக்கபட்டிருக்கின்றவர்களின் நலன்களுக்காக  கொடுத்துவிடுவேன் என்று அறிவித்தும் விட்டார்.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி மஹிந்த - மைத்திரி தேர்தல் களத்தில் நிறையவே உளவாளிகள் ஊடுறுவி இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இன்னும் பலர் மஹிந்த - மைத்திரி அணியில் இருந்து கொண்டே அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணுவதையும் பரவலாகப் பார்க்க முடிகின்றது. இவர்கள் ஏன் இப்படிப் போய் தமது வேட்பாளர்களை நெருக்கடிகளுக்கு ஆளாக்குகின்றார்கள் என்று தெரியவில்லை.  

சுதந்திரக் கட்சியை புனிதமாக்க கிடைத்திருக்கின்ற  நல்லதொரு சந்தர்ப்பமாகத்தான் இந்த நிகழ்வுகளைப் பார்ப்பதாக முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்காவின் மகன் விதுர விக்கிரமநாயக்க குறிபிடுகின்றார். அத்துடன் பண்டாரநாயக்காக்களை லச்சில் போட்டு அடைத்துவைக்கவும் நெருக்கடி வரும்போது  வெளியில் எடுத்துக் காட்சிப் படுத்துவதும் நாகரிகம் இல்லாத செயல்கள் என்று அவர் ராஜபக்ஷக்களை விமர்சித்து வருகின்றார்.

அமைச்சர் ரெஜீனோல்ட் குரே பைல் கதைகளை இப்போது பேசுவது பெறும் முட்டால்தனம் அப்படியானால் கள்ளவர்களின் பையில்களை மறைத்து வைத்துக் கொண்டிருந்தவனை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று ஆளும் தரப்பு ஊடகச் சந்திப்பிலேயே கேள்வி எழுப்பி இருக்கின்றார். இப்படி அவரும் ராஜபக்ஷக்கள் பைல் கதைக்கு ஆப்பு வைத்திருக்கின்றார். 

அணுரகுமார திசாநாயக்க சின்னக் கள்வர்களின் பைல்களை ஒழித்து வைத்திருக்கின்றேன் என்று ராஜபக்ஷ குறிப்பிடுவதால் அவர்தான் பெரிய கள்வராக இருக்க வேண்டும் என்று கடுமையாக சாடி இருக்கின்றார். எனவே ஜனாதிபதியின் பைல் விவகாரம் முட்டிக் குணிந்த கதைதான். இதனால் இப்போது பைல் விடயத்தில் ராஜபக்ஷ வாய்திறப்பதை நாம் பார்க்க முடிவதில்லை.

இதேபோன்று அமைச்சர் ஜனக தென்னகோனும் குறிப்பிட்டிருந்ததை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம். அவருடைய மகன் மத்திய மாகாண சபை அமைச்சர் பிரமித்த தென்னக்கோன் நாம் கொலை செய்யப்பட்டாலும்..? என்ற ஒரு வார்த்தையை அங்கே பேசி இருக்கின்றார். எனவே இது போன்று ஆளும் தரப்பில் இருந்தாலும் இன்னும் நிறையப்பேர் முறன்பாடுகளுடனே ராஜபக்ஷ முகாங்களில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் என்று எமக்கு ஊக்கி முடிகின்றது.

இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் செயல்பாடுகள் விடயத்தில் கட்டுரையாளனுக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. இது பற்றி நாம் கடந்த வாராம் குறிப்பிட்டிருந்தோம். இவரும் பொது வேட்பாளர் மைத்திரிக்கு எதிராக செலாற்றிக் கொண்டிருக்ன்றார் என்று தெரியவருகின்றது. மைத்திரி வெற்றி பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் ரணில் சர்வாதிகாரங்களும் கொண்ட பிரதமர் என்று அறிவிப்பை விடுத்து ஒரு சர்ச்சையைத் தோற்றவித்தார். 

இவர் ஆளும் தரப்புடன் இணைந்து கொள்ளும் முயற்ச்சியில்தான் இன்னும் இருக்கின்றார். கடைசி நேரத்தில் கூட இவரும் இன்னும் சிலரும் குரங்கின் வேலை பார்க்க இடமிருக்கின்றது என்பது கட்டுரையாளனின் சந்தேகம்.  

இந்த நாடு மிகவும் ஆபதத்தான கட்டத்தில் இருந்து வருகின்றது மக்கள் நிறையவே தொந்தரவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகி இருக்கின்றார்கள். இதனால் மக்களை ஆபத்தான நிலையிலிருந்த மீட்பதற்காக நாம் எம் உயிர்களைப் பணயமாக வைத்து இந்த ஆபத்;தான வேலையில் இறங்கி இருக்கின்றோம் என்று முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ குறிப்பிட்டிருக்கின்றார். எனவே முன்னாள் ஜனாதிபதி கூட உயிர் பயத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. அப்படியானால் சாதாரண குடிகளின் நிலை என்ன? அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர் நிலையும் என்னவாக இருக்க முடியும்?

அண்மையில் நடந்த ஆளும்தரப்பு ஊடகவியளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளும் பொது முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந் தற்போதய எதிரணி வேட்பாளர் மைத்திரி  சரத் பென்சேக்க 2010ல் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை  விட ஒரு வாக்கேனும் குறைவாகவே மைத்திரி பெற்றுக் கொள்வார் என்று அடித்துக் கூறிவருகின்றார்.

தற்போது ஆளும்தரப்பினர் தமது பிரச்சாரங்களை முன்னெடுப்தற்குப் பதிலாக தமது தரப்பில்லிருந்து தப்பியோட முனைபவர்களை வளைத்துப் பிடித்து வைத்துக் கொள்வதில் தமது காலத்தைச் செலவு செய்து கெண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஓவருக்கு 50 கோடி மாகாண சபை உறுப்பினருக்குப் 3 கோடி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு 10முதல்20 இலட்சம் வரை என்று  அவர்கள் சந்தையில் விலைப்பட்டிருக்கின்றார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்! என்று ஊவா எதிர்க் கட்சித் தலைவர் ஹரின் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார். நவின் திசாநாயக்க தனக்குப் 10 கோடி தரவந்தவர்களை சந்தர்ப்பம் வரும்போது கூறுவதாக குறிப்பிட்டார்.  

அதே நேரம் வெளிநாடுகளும்  மேற்கத்திய என்ஜீயோக்களும் பெரும் தொiகான பணத்தை இந்தத் தேர்தலில் முதலிட்டு இருக்கின்றது. அந்தப் பணத்தைக் காட்டி எமது ஆட்களை விலைக்கு எதிரணியினர் வங்க முயன்று வருகின்றார்கள் என்று, சீனி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்தன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குக் கை நீட்டுகின்றார். 

பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பாக நடுநிiயான நிலைப்பாட்டுடன் நானும் ஆளும் பொது முன்னணி செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்தும் ஜனாதிபதியைச சந்திக்கச் சென்றோம். அப்போது ஜனாதிபதி அந்த விடயங்களை நான் பார்த்துக் கொள்கின்றேன். இது போன்ற விடயங்களில் நீங்கள் இதற்குப் பின்னர் தலையிடக் கூடாது என்று மஹிந்த எம் மீது எறிந்து விழுந்தார். நான் சொல்கின்றபடி நடந்து கொள்ள முடியா விட்டால் உங்களுக்கு எதிரான பைல்களைத் தயாரித்துவிடுவேன் என்று எம்மை அவர் எச்சரித்தாhர் என்று கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் மைத்திரி பகிரங்கமாக பேசி இருக்கின்றார்.

பாதைகள் அபிவிருத்தி தொடர்பான ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, அதில் நடக்கின்ற ஊழல்கள் பற்றி கேள்வி எழுப்பினேன் அடுத்நாள் என்னை ஜனாதிபதி வாசஸ்தளத்துக்கு வந்துபோகுமாறு கேட்கப்பட்டது. நான் அங்கு சென்றேன். நீங்கள் ஆளும் தரப்பு அமைச்சர் நீங்கள் உங்கள் அமைச்சு Nவைலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசை விமர்சிக்கின்ற எதிர் கட்சிகளின் வேலையை இதன் பின்னர் நீங்கள் செய்யக் கூடாது என்ற ஜனாதிபதி என்னிடத்தில் கேட்டுக் கொண்டர். 

இந்தத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஒருவரை களமிறக்க அரசு முயற்ச்சித்திது வருகின்றது. 500 கோடி ரூபாய்களை அந்த அமைப்பிற்கு வழங்க  வர்தகர் ஓரு வர்த்தகர் ஊடாகப் பேச்சு வார்த்தைகளை நடாத்தி இருக்கின்றது என்று ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. எக்காரணம் கொண்டும் சம்பந்தன் போன்றவர்கள் இந்தக் காரியத்தில் இறங்க மாட்டார்கள் என்றாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை இது விடயத்தில் உபயோகிக் முயச்சிகள் மேற் கொள்ளப்படலாம் என்றும் தெரிய வருகின்றது. 

கடந்த முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிபரகரன் 200 கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணிலுக்கு தமிழ் வாக்குகளை செல்வதைத் தடுத்திருந்தார் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. எனவே இந்தமுறை தழிழ் வாக்குகள் மைத்திரிக்கு செல்லவாய்ப்பு  இருப்பதனால் அதனைத் தடுக்க இந்த ஏற்பாடு என்றும் அந்த இணையத்தளத்தில் கூறப்படுகின்றது.

அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்ஷ தனது நண்பர் சகல ரத்னாயக்காவின் மூத்த சகோதரர் காவன் ரத்தனாயக்கவின் கொழும்பு 7ல் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் நாங்கள் மைத்திரியை நடத்திய விதம் தவறு என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார். மைத்தி தனது நல்ல நண்பர் என்றாலும் அவர் தற்போது தன்iயும் சந்தேகிக்கின்றார் என்று தெரிகின்றது.

இந்தத் தேர்தலில் நாம் தோற்றுப் போனால் வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது உள்நாட்டிலும் இருக்க முடியாது. கடலில்தான் குத்திக்க வேண்டி இருக்கும் என்று அங்கு வேதனையுடன் குறிப்பிட்டதாக ஜேவிபியின் உத்தியோக பூர்வமான இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இணையத்தளங்களில் செய்திகள் எந்தளவுக்கு உண்மையானது என்ற விடயத்தில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றது. 

என்றலும் இந்தச் செய்தியை ஜேவிபியின் உத்தியோக பூர்வமான இணையம் வெளியிட்டிருக்கின்றது என்பது குறிப்படத்தக்கது.  மேலும் தமது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவும் நானும் இந்த விடயங்களை சகோரர் ராஜபக்ஷ வீட்டிற்குச் சென்று எடுத்துக்கூறி இருக்கின்றோம் எல்லாவற்றையும் அவர் ஏற்றுக் கொண்டு தலை அசைத்தாலும் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இது விடயத்தில் என்ன என்பதனைப் புரிந்து கொள்ள எம்மால் முடியாமல் இருந்து வருகின்றது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டதாக அந்த இணையும் மேலும் கூறுகின்றது.  

ஆளும் தரப்பிலிருந்து தொலைக் காட்சி விதங்களுக்கு வருகின்றவர்கள் அனைவரும் மைத்திரி பற்றிய விமார்சனைங்களைத் தவிர்த்து அவர் ஒரு புனிதமான அரசியல் வாதி என்று சன்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர் இன்று சதிகாரர்களின் பிடியில் சிக்கி விட்டார்கள் என்பது தான் அவர்கள் மைத்திரிக்கு எதிராக முன்வைக்கின்ற ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.

துற்போது இரு முகாம்களாகப் பிரிந்திருக்கின்ற அரசியல் தலைவர்களை நேக்கின்றபோது ஆளும் தரப்பு மேடையில் மஹிந்த, விமல், வாசு, திஸ்ஸ pதாரன, டீயு குனசேகக்ர போன்றவர்கள் ஏறுவார்கள் இவர்கள் அரசியல் ரீதியில் எவ்வளவு கவர்ச்சியானவர்கள் அவர்களுடைய வாக்கு வங்கிகளின் நிலiமை என்ன என்று மக்களுக்குத் தெரியும்.

அதே நேரம் எதிரணி பொது வேட்பாளர் மேடையில் மைத்த்ரி, சேபித்த, சந்திகா, ரணில் , சஜித், பொன்சேக்க, அதுருலியே, சம்பிக்க, போன்றவர்கள் நேரடியாகவும். அணுரகுமார திசாநாயக்க, சம்பந்தன் போன்றவர்கள் மறைமுகமாக மைத்திரிக்காக களமிறங்க இருக்கின்றார்கள்.  இந்த அணி  ரஜபக்ஷ அணியை விட மிகவும் கவர்ச்சியானது.  

இதற்கிடையில் 2015 தேர்தலில் சில டம்மி வேட்பாளர்களும் களத்தில் இறங்க இருக்கின்றனர் இவர்கள் ராஜபக்ஷவுக்காகவும் மைத்திரிக்காகவும் தமது பரப்புரைகளை மேற் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கிடையில் ஊவா, கிழக்கு, மேல், வட மத்திய, மாகாண சபைகள் ஆளும் தரப்பின் பிடியிலிருந்து எதிரணிக்குப் பறிபோகலாம் என்று தெரிகின்றது இதனால் இந்த மாகாண சபைகளின் அடுத்த அமர்வை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஒத்தி வைத்திருக்கின்றார்கள் ஆளும் தரப்பினர். இதில் ஊவா மகாண சபை ஒத்திவைக்கக் கூறப்பட் காரணம் மிகவும் வேடிக்கையான குளீர் காரணமாக மாகாண சமைக் கூட்டங்களை நடதத்த முடியாது என்பதுதான் அந்தக் காரணம்.

இந்த நாடும் சர்வதேச சமூகமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதித் தேர்தல் திசம்பர் 8ம் திகதி ஆரம்பிக்கின்றது. கிராமங்கள் நகரங்கள் ஒழுங்கைகளுக்குள் வாழ்கின்ற எல்லோரும் நாளை முதல் துவங்கும் அரசியல் ஆட்டங்களைக் கண்டுகளிக்க ஆவலுடன் இருக்கின்றார்கள் தேர்தல் எவ்வளவு தூரம் நேர்மையாக நடாத்தப்படப் போகின்றது. 

தேர்தல் விதி முறைகளை மீறுகின்றவர்கள் மீது தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் எப்படி நடந்து கொள்ளப் போகின்றார்கள். தேர்தல் வன்முறைகள் எந்தளவுக்கு மட்டுப்படுத்தப்படப் போகின்றது? எத்தனை உயிர்கள் இந்த தேர்தலில் பலியாகப் போகின்றது என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்கக் வேண்டி இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கைகளில் வைத்திருக்கின்ற  பைல்களும் மக்கள் தமது கைகளில் வைத்திருக்கின்ற பைல்களை நாளை திசம்பர் 8திகதி முதல் பார்த்து விட்டு ஜனவாரி 8ம் திகதி என்ன தீர்ப்பை வழங்கப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். 
Share it:

Post A Comment:

0 comments: