தோல்வியடைந்தாலும், மஹிந்த 2 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்

Share it:
ad
வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று (16-12-2014) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.


அனுரகுமார திஸாநாயக்க 

வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி பதவியில் இருப்பாரெனத் தெரிவிக்கப்படும் கருத்துத் தொடர்பில்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவித்தார்.

பிலியந்தல பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

உறுதியாக வெற்றி பெறுவதாக முதலில் கூறினார்.  தற்போது தோல்வியடைந்தாலும் செல்வதில்லை என்று கூறுகிறார். தோல்வியடைந்தால் செல்வதாகக் கூறினால் அவரை சுற்றியுள்ளவர்கள் குழம்பிவிடுவர்.  அவரை சுற்றி ஒரு சிறிய குழு உள்ளது.  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் உள்ளனர். பொற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் துறைமுக அதிகாரசபை போன்றவற்றின் ஊழியர்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்படும்.  தற்போது புதியதொரு விடயத்தை  மேடைகளில் கூறுகிறார்.  எவ்வாறாயினும், தனக்கு மேலும் இரண்டு வருடங்கள் உள்ளதாகக் கூறுகின்றார்.  புதிய விடயமொன்றைக் கொண்டுவர  முயற்சிக்கின்றார். அதாவது, ​தோல்வியடைந்தவரும் இருப்பார், வெற்றி பெற்றவரும் இருப்பார். தோல்வியடைந்தவர் ஜனாதிபதி ஆசனத்தில் இருப்பார். வெற்றி பெற்றவர் வெளியே இருப்பார். மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்தால் மறுநாளே செல்வதற்குத் தயாராக வேண்டும்.  அதனை நாம் உறுதியாகக் கூறுகின்றோம்
Share it:

Post A Comment:

0 comments: