2015 இன் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையும், சிறுபான்மை மக்களும்

Share it:
ad
 (நபீல்)

இலங்கை வரலாற்றின் மாறுபட்ட நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நடை பெற இருக்கிறது. இலங்கையில் இது வரை ஆட்சி செய்த அரசாங்கத்தில், ஒருவர் மூன்றாம் முறையும் நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடுவது இதுவே முதல் தடவை. இது இலங்கைஅரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறு பட்டது, இருந்தும் தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அரசியல் யாப்பில் தனக்கு வசமாக மாற்றங்களைச் செய்துள்ளார். இவருடைய கடந்த கால ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்தது இருந்தும் தற்போது சிறு சிறு பயங்கரவாதம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, இதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் துணை போகிறார்கள்.

சிறுபான்மை மக்களின் கடந்தகால இலங்கையை எடுத்துக்கொண்டால் பல பிரச்சனை நடந்து இருக்கிறது. இப்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனை சிறு பான்மை மக்களின் மதங்களுக்கும், காலச்சாரங்களுக்கும் எதிரான போர்கள் பெரும்பான்மை சமுகத்தின் சில இனவாதிகளால் தூண்டப்பட்டு கொண்டு இருக்கிறது.ஆகவே சிறுபான்மை மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பாகிரார்கள். காரணம் தமக்கு அபிவிருத்தி இல்லாவிட்டாலும் தன் சமுகத்தின் பாதுகாப்பும் சுதந்திரமும் ஆட்சி மாற்றத்தால், அடுத்த அரசாங்கத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

ஆனாலும் எந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள், தீர்வுகள் எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்துவார்கள் என்ற சந்தகம் காணக் கூடியதாக இருக்கிறது. காரணம் கடந்தகாலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகத்துடன் ஒப்பந்தம் செய்து ஆட்சிக்கு வந்த பின்னர் ஒப்பந்தங்கள் நடை முறையில் செயல் படுத்தாமை.

மக்களிடம் கூக்கல் இட்டு மக்களின் ஆணையை பெற்று அரசாங்கத்துடன் போய் சேர்ந்த சுயநலவாதிகளாக இருக்கும் சிறுபான்மை மக்களின் சிறு சிறு கட்சிக் குழுக்கள், இவர்களால் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுமா என்ற சந்தகம் மக்களின் மத்தியில் காணக் கூடியதாக இருக்கிறது.உண்ண உணவு இல்லை ஏழைகளுக்கு, ஆனால் தையல் மெசின் வழங்குதல், வைத்தியசாலைக்கு மருந்து இல்லை ஆனால் சுற்ற வர மதில் கட்டுகிறார்கள் கண் கெடும் முன்னே மருந்து இல்லை, கண் கெட்ட பின் கண்ணாடி இதுதான் இவர்களின் சேவை.

இருக்கும் ஆட்சி நீடிக்கு என்றால் ஆட்சி காரரின் குடும்பத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும். பல பலி வாங்கல்கள் நடைபெறும் பழைய குருடி கதவை திறடி என்ற மாதிரி ஆட்சி நடைபெறும் சிறுபான்மை சமுகம் இரையாகும்.

தொடரும்..!
Share it:

Post A Comment:

0 comments: