ஒஸாமாவை தலையில் சுட்டுக்கொன்ற, அமெரிக்க சீல் வீரர் ISIS க்கு விடுத்துள்ள சவால்..!

Share it:
ad
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் வீரர் ரொப் ஓனைல் முதல்முறையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 2011, மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து பின்லேடனின் தலை மீது மூன்று முறை சுட்டு 38 வயது ரொப் ஓனைல் அவரை கொன்றிருந்தார். இந்த தாக்குதலை நடத்தியவரின் விபரம் குறித்த இரகசியம் பேணப்பட்டு வந்தபோதும் ஒனைல் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி இம்மாத இறுதியில் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்க திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நேவி சீல் படையின் முக்கிய வீரரான ஓனைல் 400க்கும் அதிகமான யுத்த நடவடிக்கைகளில் பங்கேற்றிருப்பதோடு 52 தடவைகள் கௌரவிக்கப்பட்டுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரோ டாக் தேட்டி, கெப்டன் பிலிப்ஸ் மற்றும் லோன் சவைவர் ஹொலிவுட் திரைப்படங்களிலும் ஓனைல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தனது 16 ஆண்டு இராணுவ பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இராணுவத்தால் கிடைக்கும் .சலுகைகளையும் இழந்த நிலையில் உண்மைகளை வெளிப்படுத்த ஓனைல் முன்வந்திருக்கிறார்.

ஓனைலின் தந்தை டொம் ஒனைல் பிரிட்டனின் டெய்லிமெயில் இணையத்தளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், "ரொப் தன்னை பற்றி வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினால் ஐசிஸ் (இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள்) வந்து எம்மை கவ்விக்கொண்டு போவார்கள் என்று சிலர் பயப்படுகிறார்கள்.

எம்மை வந்து எடுத்துக்கொண்டு போகுங்கள் என்று எனது வீட்டின் முன் கதவில் எழுதி வைக்கப்போகிறேன் நான் அவர்களுக்கு சொல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
Share it:

Post A Comment:

0 comments: