தென் கொரிய 'டிவி'யை பார்த்த வட கொரியர்கள் சுட்டுக்கொலை

Share it:
ad
தென் கொரிய, 'டிவி' நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த, 50 பேருக்கு, பொதுமக்கள் முன்னிலையில், வட கொரிய அரசு, மரண தண்டனை நிறைவேற்றிஉள்ளது.

வட கொரியாவில், தென் கொரியா மற்றும் பிற நாடுகளின், டி.வி., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, வெளிநாட்டு திரைப்பட, 'டிவிடி'க்களின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம், அரசின் தடையை மீறி, தென் கொரிய டி.வி., நிகழ்ச்சிகளை திருட்டுத்தனமாக பார்த்த, ஆளுங்கட்சியைச் சேர்ந்த, 10 ஊழியர்கள், பொதுமக்கள் முன்னிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, 80 பேரும், இந்த ஆண்டு இதுவரை, 50க்கும் மேற்பட்ட வட கொரியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, தென் கொரிய உளவுத் துறை கூறியுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: