வாபஸ் வாங்க வேண்டியது யார்...?

Share it:
ad
(டாக்டர்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம் காங்கிரசு வடகிழக்கு மாகாண சபைக்குக் கொடுத்த ஆதரவுக்குப்பதிலாக, அரசாங்கம் செய்து தருவதாக வாக்குறுதியளித்த விடயங்களை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த நிலை தொடருமாயின் எதிர்வரும் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த விடயத்தில் இவர் பாராளுமன்ற உறுப்பினர்களை சாடுவது நியாயமாகுமா என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பது கிழக்கு மாகாண சபையை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக தேவையான ஆதரவை முஸ்லிம் காங்கிரசு உறுப்பினர்கள் நிரப்புகிறார்கள் என்பதற்காகத் தான் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். உண்மை இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசு உறுப்பினர்கள் செய்ய வேண்டியதை பாராளுமன்ற உறுப்பினர்களைச் செய்யுமாறு கோருவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

இவரின் இந்தக்கோரிக்கையானது முஸ்லிம் காங்கிரசு தலைவருக்கும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலையிடியையே கொடுத்திருக்கும். 

நியாயமாகப் பார்த்தால், இவர்களுக்குத் திருப்தியில்லை என்றால் கிழக்கு மாகாண சபையில் தாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். அல்லது ஆதரவை வாபஸ் வாங்கப்போகிறோம் என்று குறைந்த பட்சம் அறிக்கையாவது இவர்களால் விட முடியுமா என்று மக்கள் அங்கலாய்ப்பதைக் காணமுடிகின்றது.

கூலி எனக்குரியது, வேலை அவருக்குரியது என்பது போலிருக்கிறது அந்த அறிக்கையின் சாராம்சம். 
Share it:

Post A Comment:

0 comments: