(பழுலுல்லாஹ் பர்ஹான்)
உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
29 நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரவித்த பிரதியமைச்சர்,
உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பட்டு ஓரு தமிழ் சமூகம் பட்ட துன்பம் துயரம் எமக்கு தெரியும். இந்த தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை செய்து செய்து தமிழ் மக்களை அதன் மூலம் காயப்படுத்தியுள்ளதை நேரடியாக கண்டிருக்கின்றோம். ஆகையால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்ய முடியாது நாங்கள் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்
பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனை என்ன ? இந்ந நாட்டில் வாழுகின்ற மக்களில் 80 வீதம் பெரும்பான்மை சமூகம் அந்த மக்களின் தீர்ப்பு என்ன ? அந்த மக்களின் போக்கு என்ன? அந்த மக்கள் யாரை வெற்றிபெறச் செய்யப்போகீறார்கள் அதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
அண்மையில் அழுத்கம மற்றும் தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் மற்றைய இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் பள்ளிவாயல்கள் அரசாங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விளங்கிக் கொள்லாமல் நாங்கள் எங்களுடைய சமூகத்திற்காக பேசுகின்ற பொழுது நாங்கள் கருத்துக்களால் விமர்சிக்கப்படுகின்றோம் அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை அதை வரவேற்கின்றோம்.
ஆனால் அந்த கருத்துக்களின் மூலம் நீங்கள் எங்களுக்கு என்ன சொல்ல வருகின்றீர்கள் ? அதனை நீங்கள் தெளிவாக சொல்ல வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள் அதில் அக்கறைப்பற்றில் கொஞ்சம், காத்தான்குடியில் கொஞ்சம், வன்னியில் கொஞ்சம் மற்றும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். மற்ற அனைத்து முஸ்லிம்களும் சரத் போன்சோகாவுக்குதான் வாக்களித்தார்கள். ஆனால் எல்லோரும் சொன்னார்கள் சரத் போன்சேகா வெள்ளப் போகிறார் என்று ஆனால் அவர் படுபயங்கர தோல்வி அடைந்து கிட்டத்தட்ட 19 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
நம் நாட்டுடைய அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஒரு தோற்றுப்போகிற அரசியலுக்கு பின்னால் எங்களுடைய சமூதாயத்தை கொண்டு போக முடியாது. சில நேரங்களில் நாங்கள் சொல்லுகின்ற நேரம் அதை ஏற்றுக் கொள்வதற்கும் சிலர் ஆயத்தமில்லை. ஆனால் நாங்கள் உண்மையை யதார்த்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் தோற்றுப்போகிற அரசியலோடு இணைந்து எங்களுடைய சமூதாயத்தை கொண்டு போக முடியாது என்னதான் பிரச்சினை இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்க்கக் கூடிய சக்தியோடுதான் நாங்கள் இருக்க வேண்டும் அதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும், மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் மிகத் தெளிவாக எங்களுடைய அபிப்பிராயத்தின்படி மிக மோசமாக படு தோல்வி அடைவார்.
சரத் பொன் சேகா என்கின்றவர் கடந்த யுத்தம் முடிவடைந்த உடனையே ஒரு மாபெரும் படை வீரன் படைத் தளபதி என்ற அடிப்படையில் அரசியலுக்கு வந்தவர்.அவரே மிக மோசமாக தோல்வி அடைந்தார். அதை விட மோசமான தோல்வியைத்தான் இந்த எதிர்க்கட்சி வேட்பாளர் இந்த தேர்தலில் அடையப்போகின்றார்.
ஆகவே முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது எங்களுக்குள் பிரச்சினை இருக்குதான். பௌத்த தீவிரவாத அமைப்பு பொது பல சேனாவுடன் எங்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கிறது. நிறைய ஆத்திரத்தோடு நாங்கள் முஸ்லிம்கள் இருக்கின்றோம் ,அவர்களை தோல்வி அடையச் செய்ய வேண்டும், அவர்களை அழிக்க வேண்டும் என்றுதான் நாம் இருக்கின்றோம். அவர்களை அழிக்கப்போகிறோம். தோல்வி அடையச் செய்யப்போகின்றோம் என்று கூறி நம் சமுதாயத்தை இதை விட மோசமான நிலமைக்கு தள்ளி விட முடியாது.
எங்களுடைய சமூகத்திற்கு சரியான தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. நீங்கள் எந்த தீர்மாணத்தையும் எடுக்கலாம் ஆனால் தலைமைத்துவங்கள் நாங்கள் உங்களுக்கு சரியான வழியை காட்ட வேண்டும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷ என்ற அந்த அலையிலே முஸ்லிம் சமூதாயம் பாதுகாக்கப்பட்டாக வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மஹிந்த ராஜபக்ஷவினுடைய வெற்றியிலே முஸ்லிம் சமூதாயம் கணிசமான பங்களிப்பு செய்தது என்ற அந்த செய்திதான் இந்த முஸ்லிகளை மாத்திரமல்ல வட- கிழக்குக்கு வெளியிலே மலைகளிலும், குண்றுகளிலும்,கிராமங்களிலும் வாழுகின்ற அந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் போகின்றது.
நம் உனர்ச்சி, நம் அவசரம்,உனர்வுகள் என்று சொல்லி இன்னும் மோசமாக இந்த சமூதாயத்தை பாதிப்புக்குள்ளாக்குவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. நாங்கள் பேசுகின்ற பொழுது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகுகின்றோம் எல்லாம் எங்களுக்கு தெரியும் அதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம் அரசியலில் நான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 25 வருடம் ஆகவே நாங்கள் எங்களுடைய மக்களுக்கு சரியான வழிகாட்டலை காட்ட வேண்டும்.
நாங்கள் எங்களுடைய சமூகத்திற்கு உணர்வுகள்,உணர்ச்சிகலாள் இன்னுமொரு அழிவை ஏற்படுத்தி விடக்கூடாது அதனை நீங்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனவரி 8ம் எட்டாம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு இந்த முஸ்லிம்கள்தான் முழு இலங்கையிலும் வாழுகின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்த சமுதாயம் என்கின்ற செய்தியை கொடுக்குகின்றவர்களாக நீங்கள் மாற வேண்டும். அது வரையிலும் நாங்கள் விமர்சிக்கப்பட்டுக் கொண்டுதான் இருப்போம். சில நேரங்களில் நாங்கள் மிக மோசமாக விமர்சிக்கப்படுவோம் அதை நான் இல்லை என்று சொல்லவில்லை ஏனென்றால் அந்த உனர்வுகள், உனர்ச்சிகளுக்கு முன்னாள் நாங்கள் விமர்சிக்கப்படலாம்.
இன்ஷா அல்லாஹ் அதன் பிரதிபலனை நீங்கள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தெரிந்து கொள்வீர்கள் ஆகவே நாங்கள் எல்லோரும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் அவர் வெற்றிபெறப்போகின்ற அந்த வெற்றியிலே நாங்களும் பங்காளிகலாக வேண்டும் .
இங்குள்ள பிரச்சினைக்கும் திர்வு காண வேண்டும் வடக்கு,கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும் அல்லாஹூத் தஆலா எங்கள் எல்லோருக்கும் நேரான பாதையை காட்ட வேண்டும் ,சரியான வழியை காட்ட வேண்டும் இந்த நாட்டுக்கு பொறுத்தமான முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நீங்கள் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் நாம் எல்லோருக்கும் மேல் அல்லாஹ்வுக்கு தெரியும் எதை தெரிவு செய்ய வேண்டும்,எதை தெரிவு செய்யக் கூடாது ஒவ்வொறு அனுவும்,நடக்குகின்ற செயலும் அல்லாஹ்வின் நாட்டத்தில் நடக்குகின்ற விடயம் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் எந்த செயலும் நடக்க முடியாது நாங்கள் 100 வீதம் நம்பிக்கை கொண்டவர்கள் நடக்கின்ற ,நடக்க இருக்கின்ற அத்தனை செயலும் அல்லாஹ்வின் நாட்டத்திலுள்ள விடயம் எனவும் மேலும் தெரிவித்தார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.
Post A Comment:
0 comments: