மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கோரியுள்ளமை அவரது தனிப்பட்ட விடயம் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலையிடாது என்று அவ கூறியுள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை இவ்வாறு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளதன் மூலம், தேர்தல் ஆணையாளரின் உரிமையும், சுயாதீனத் தன்மையும் மீறப்பட்டிருப்பதாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவர் தகுதியானவரா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் தேர்தல்கள் ஆணையாளருக்கே இருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும்.
இதன் பொருட்டே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஒரு மணித்தியாலம் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதற்கு முன்னதாகவே உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியுள்ளதன் மூலம் தேர்தல் ஆணையாளரின் சுயாதீனத்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



Post A Comment:
0 comments: