தமிழ் தேசிய கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் பேசினால், அது பூதாகரமாக்கப்படுகிறது - சம்பந்தன்

Share it:
ad
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை பூதாகரமாக்கி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேசினாலோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினாலோ ஊடகங்கள் இந்தளவு முக்கியத்துவம் வழங்குவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு ஆதங்கப்பட்டார். 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸுக்குமிடையில் கடந்த வாரம் கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இப் பேச்சுவார்த்தையின்போது இரா. சம்பந்தன் எம்.பி. மேற்கண்ட விடயம் குறித்து மிக ஆக்ரோஷமாக பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 45 நிமிடங்கள் அவர் பல விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டார். அப்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததாகவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு, அரசியல் கள நிலவரம் ஆகியன குறித்து ஆராயப்பட்டன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மாகாண பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் - தமிழ் உறுப்பினர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் இப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  Vi
Share it:

Post A Comment:

0 comments: