(லாஹீர் நப்ரிஸ்)
இலங்கை எனும் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம்படுத்தும் முஸ்லிம் கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இன்றைய அரசியல் நிலவரத்தில் இவர்களின் அரசியல் ஈடுபாடு குறிப்பாக நடை பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு என்பதையே இலங்கைவால் முஸ்லிம்கள் எதிர் பார்க்கும் ஒரு ஆணித்தரமான முடிவு, இது இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய முடிவு என்றால் அது எவராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை. நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான இரு பெரும்பாண்மை கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதான கதாபாத்திரம் ''நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை '' எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரி இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாது ஒழிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் எமது ஜனாதிபதி மஹிந்த இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என கூறவும் இல்லை. மொத்தத்தில் இவர்களின் அரசியல் தந்துருபாயம் என்றே இதை அழைக்கலாம்.
எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டும் என அடம்பிடிக்கிறது ஏன் என்று தெரியுமா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அது பேரம் பேசும் சக்தி இதை கற்றுகொடுத்த வள்ளல் மாமனிதர் அஷ்ரப் அவர்களே. இதை இன்னும் எமது இப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பின்பற்றிகொண்டுதான் இருக்கிறார். எமது எதிர் கட்சி பொது வேட்பாளர் மைத்திரி சொல்வது போல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் ,18 ம் திருத்த சட்டம் ஒழிக்கப்பட்டு, பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் பிரதமர் நியமிக்கப்பட்டால் புதிய தேர்தல் முறைபடி 70% தொகுதிவாரி முறைப்படியும் 30% இன விகிதாசாரம் முறைப்படியும் பார்க்கப்படும், இப்படி நடந்தால் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தி இல்லாமல் போய்விடும் அது மட்டும் இல்லாமல் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பியிருக்கும் இரு பெரும்பான்மை கட்சிகளும் தேர்தலில் எளிதாக வெற்றி பெரும். சிறுபாண்மை மகளின் நிலைமையை புரிந்துகொள்ள ஒரு எதிர்கால பெரும்பாண்மை அரசியல் இருக்கும் என்பது ஒரு பகல் கனவு.
பொது பலசேனா நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது இந்த செய்தி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் அவர்களை இன்னும் பாதித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரிஷ்,பைசால் காசிம் , ஹசன் அலி ஆகியோர்கள் எதிர்கட்சி பொது வேடபாளர் மைத்ரிக்கு ஆதரவையும் , ஹகீம் , பஷீர் அவர்களின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்தவுக்கு இருக்கிறது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சொல்லும் ஒரு காரணம் மஹிந்த ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதால் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிகரமாக மூன்றாவது முறையாக தெரிவுசெயயபடுவார் என உறுதியாக இருக்கிறார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொறுத்தவரை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை உளரீதியாக விரும்பவில்லை, இன்னுமொரு பாராளுமன்ற தேர்தல் மூலம் தனது பேரம் பேசும் சக்தியை விதைத்து புதிய ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாம் என்று பிரியத்தனம் கொண்டவர்கள்.
இவர்களின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும்கூட இலங்கைவாழ் முஸ்லிம்களின் வாக்குகள் எதிர் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவுக்கு கிடைப்பதை தடுக்கவே முடியாதுஒன்று.இரு வேட்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , அங்கத்தவர்களை கழுகு கண் கொண்டு பார்க்கிறார்கள், இவர்களின் வலையில் சிக்குவது யாரு????? கோடி ,கோடி,பணம் புரளும் இந்ததேர்தலில் இவர்களின் முடிவு எமது ஒற்றுமொத்த சமூகத்தின் முடிவாக இருக்குமா? தம்புள்ளை பள்ளி உடைப்பு இருந்து தர்கா டவுன் எமது முஸ்லிம் சகோதர்கலின் உயிர் பறிப்புக்கு உடந்தையாக இருந்த பொது பலசேனக்கு அழிவு வரும் காலம் தொலைவில் இல்லை, இதுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் முடிவு எமது எதிர்கால வரலாறும் கூறும்.
Post A Comment:
0 comments: