மங்களவின் வீடு சென்ற மஹிந்தவும், நாமலும் - பல்டியடித்தால் அமைச்சு பதவி தயார்

Share it:
ad

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும்  இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது.

மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கி கொண்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Share it:

Post A Comment:

0 comments: