பதவியை வழங்குவதும், எடுப்பதும். அல்லாஹ்தான் - ஏ.எச்.எம் அஸ்வர்

Share it:
ad
(அஷ்ரப் ஏ சமத்)

இன்று 28ஆம்திகதி பிற்பகல்  முஸ்லீம்  மீடியாபோரம் காலம்சென்ற இஸ்லாமியப் பாடகர் இசைக்கோ முர்சிக் நூர்தீன் பற்றிய இரங்கள் உரை நிகழ்த்தும் நிகழ்வொன்றை மருதாணை அல்சாபா மண்டபத்தில் நடாத்தியது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவுப் ஹக்கீம், மற்றும்  முன்னாள்;இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர், கலைவாதிகலீல், என்.எம். அமீன், காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன்  இசைக்கோ நூர்தீனின் மகன் சட்டத்தரணி நூர்தீன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இசைக்கோ நூர்தீன் பற்றி உரையாற்றினார்கள்.

இங்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் இசைக்கோ பற்றி பேசுகையில் - இசைக்கோர் நூர்தீன் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கற்று 10 வயதில் இருந்து இலங்கை வானொழியில் அவரது குரல் ஒலித்தது. 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் மரணிப்பதற்கு 2 கிழமைக்கு முன் அவரது பேத்தியின் திருமணத்திற்கு சென்று அவரை காணக் கிடைத்தது. முஸ்லீம் கலைஞர்கள் அமைப்பை  ஏற்படுத்தி அவரது சொந்தப் பணத்தில் 95 கலைஞர்களை கௌரவித்துள்ளார். 2000க்கும்  மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த முஸ்லீம்மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பிணராக இருந்து தனது பணம், பொருள் உதவிகளையெல்லாம் வழங்கியுள்ளார். கலைஞர்கள் மற்றும் வறியவர்களுக்கு உதவும் ஒருவராகவும் தனது ஆரம்ப காலத்தில் இருந்து பாடகராக வந்த அந்தத் கலையை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.

நான் நேற்று மலோசியாவில் இருந்தபோது சோசியல் மீடியா ஊடாக என்னிடம் நீ மலோசியாவுக்கு ஏன் போணீர்? அங்கு என்ன செய்கின்றாய் ? எல்லாம் பேசிபுக் ஊடகா இங்கிருந்து கேட்கின்றனர். அந்த அளவுக்கு அரசியலில் சோசியல் மீடியா மக்களிடையே குடிகொண்டுள்ளது. இப்ப எந்த அரசியல்வாதியும் இந்த ஊடகத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது. அஸ்வர் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பிணர் பதவியை துறந்து இங்கு சமுகம் தந்துள்ளார். பதவிகளைத் துறந்தால் வேளைப்பழுகுறையும் நிறைய ஓய்வு கிடைக்கும். கடந்த வாரம் தணியார் தொலைக்காட்சியில் சட்டன நேரடி விவாத நிகழ்ச்சியை பொதுவேற்பாளர் மற்றும் கட்சிகளின் பிரநிதிகளின் கருத்தைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சியை திறந்தால் அதனை எதிர்கட்சிகளுக்கு செய்யும் ;அநியாயம் போன்று அதை பார்க்கமுடியாமல் தடுக்கின்றனர். ஆனால் எனது கையடக்கத்தொலைபேசி ஊடக வெப்தளம் ஊடாகவே அந்த நிகழ்ச்சியை முற்றாக பார்க்கமுடிந்தது. இப்போதேல்லாம் இலங்கை வானொழி முஸ்லீம் நிகழ்ச்சி எல்லாம் அரசியல் மயமாகிவிட்டது. சகலதுக்குள்ளும் அ;ரசியல் நுழைந்து விடுகின்றது. 

ஏ.எச்.எம். அஸ்வர். இந்தக் நிகழ்வில் எண்னை ஒருவர் அமைச்சர் என்று விழிக்கின்றார். அடுத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் முன்னாள் அமைச்சர் என்றெல்லாம் விழிக்கின்றனர். பதவியை  வழங்குவதும் எடுப்பதும். அல்லாஹ்தான்.  நான் பாராளுமன்ற உறுப்பிணராக இருந்து பொதுபலசேனாவுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவன், தம்புல்ல பள்ளி விடயம், பலஸ்தீனததின் கொடுமைக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் பேசியவன் நான் மட்டுமே. 

நூர்தீன் எனது பாடசாலைத் தோழன் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: