கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடல்

Share it:
ad
(ஹாசிப் யாஸின்)

இலங்கை மின்சார சபையின் 45 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலும், ஆண்டுப் பூர்த்தி விசேட நிகழ்வுகளும் இன்று (03) பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவு மின் அத்தியட்சகர்களான எம்.எல்.சலீம், எஸ்.எம்.ஏ.அக்பர் உள்ளிட்ட மின்மானி வாசிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மின் பாவணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது விசேட உரை நிகழ்த்திய கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் குறிப்பிடுகையில்,

கல்முனைப் பிராந்திய மின் பாவணையாளர்களுக்கு எதுவித இடையூறும் இல்லாமல் நாளாந்தம் சீரான மின்சாரத்தினை கொடுக்கக் கூடியவாறு எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும். மின்சாரம் மக்களின் அத்தியவசிய தேவையாகும். காரியாலயத்தில் மின் பாவணையாளர்களினால் கொடுக்கப்படும் முறைப்பாடுகள் உடனுக்குடன் பார்வையிட்டு நிவர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எமது மின்சார சபை பற்றியும் உத்தியோகத்தர்கள் பற்றியும் நல்லெண்ணம் உருவாகும்.

மின்சார சபையின் 45 ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் நாம், எமது மின்சார சபையின் சேவையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அதனூடாக மக்கள் நன்மையடைய வேண்டும். ஏனெனில் புதிதாக மின்சார இணைப்பு கோருபவர்களுக்கு முடியுமானால் ஒரு நாளைக்குள் அந்த இணைப்பினை வழங்கக் கூடியவாறு எதிர்காலத்தில் எமது செயற்பாடுகளை நாம் மாற்றிக் கொள்ளவேண்டும்.

எமது பிராந்தியத்திற்குள் மின்சார திருத்த வேலைகள் மேற்கொள்ளும் போது, மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் மின் துண்டிப்பினை பெருமளவு குறைத்து திருத்த வேலைகளை எமது ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். எமது உத்தியோகத்தர்கள் மின்சாரத்துடனான திருத்த வேலைகளின் போது தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொண்டு எவ்வாறு வேலைகளை மேற்கொள்வது என பயிற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் எமது பிராந்தியத்தில் மின்சாரத் தடையினைத் தவிர்த்துக் கொண்டு இத்திருத்த வேலைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2015ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட மின்சாரத்திற்கான 25மூ வீத விலைக் குறைப்பினை மின் பாவணையாளர்களுக்கு உடன் வழங்க எமது உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமான அறிவுரைகள் இலங்கை மின்சார சபையிடமிருந்து கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் மின் பாவணையாளரின் மொத்த மின் பட்டியல் தொகையிலிருந்து 25மூ வீத தொகையினை கழித்து வழங்குங்கள். அறிவுரைகள் கிடைத்தவுடன் அதனை சீர்செய்து கொள்ளலாம் என உத்தியோகத்தர்களிடம்; கேட்டுக் கொண்டார்.


Share it:

Post A Comment:

0 comments: