வீட்டில் நாய் வளர்த்தால் சவுக்கடி தண்டனை

Share it:
ad
ஈரான் நாட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல மில்லியன் அபராதம் மற்றும் சவுக்கடி தண்டனை போன்ற சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்லாத்தில் நாய்கள் மிகவும் அழுக்கானவையாகக் கருதப்படுவதால் ஈரானில் பெரும்பாலும் யாரும் நாய்கள் வளர்ப்பது இல்லை.

ஆனால் சிலர் தங்கள் வீடுகளில் ரகசியமாக நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதோடு, தங்கள் நாயுடன் பொது இடங்களில் உலாவுகின்றனர்.

இதனால் பொது இடங்களில் நாயுடன் உலாவுபவர்களை அந்நாட்டின் கலாச்சாரக் காவலர்கள் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி, இணையம் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களில் நாய் வளர்ப்பதும் ஒன்று எனக் கருதி ஈரான் நாட்டின் ஆட்சியாளர்கள் இதைத் தடுக்க சட்டம் ஒன்றை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், இதனால் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடிகள் அல்லது 10 மில்லியன் முதல் 100 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: