விராத் கோஹ்லி, எனது காலில் விழுந்தார் - சச்சின்

Share it:
ad
 ''இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு திருப்தி அளிக்கவில்லை'' என இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் தனது 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைப்பற்றியும், அதில் சந்தித்த சவால் பற்றியும் சுயசரிதை எழுதி இன்று அதை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, டிராவிட், லட்சுமண், கவாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சச்சின் பெருமிதம்: 

தனது சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினார் சச்சின்.இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவர், 'பிளேயிங் இட் மை வே' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில் இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன் ஏற்பட்ட சர்ச்சை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதன் முதல் பிரதியை நேற்று தனது தாயார் ரஜினி டெண்டுல்கரிடம் வழங்கினார். இது குறித்து சச்சின் தனது 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,'' என் சுயசரிதையின் முதல் பிரதியை தாயாரிடம் வழங்கினேன். இதை பெற்றதும் அவரது முகத்தில் பெருமிதத்தை கண்டேன். இது விலைமதிப்பில்லாத தருணமாக அமைந்தது,'' என, குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியது: இந்திய கிரி்க்கெட் அணியில் இடம் பிடித்து நாட்டிற்காக விளையாடியதை நினைத்து பெருமையாக உள்ளது. எனது 24 ஆண்டு கிரிக்கெட் மிகவும் கரடுமுரனாதாக இருந்தது. இதில் பல சவால்களை எதிர்கொண்டேன். பல தருணங்களில் பலரின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். சில நேரத்தில் எனது பேட்டிங் மூலம் அதற்கு சரியான பதிலும் அளித்தேன். தற்போது அந்த நினைவுகளை எப்போதும் திரும்பிப்பார்க்கும் வகையி்ல் எனது சுயசரிதை எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் முதல் பதிப்பை எனது தாயாருக்கு பரிசாக வழங்கினேன்.

கேப்டன் பொறுப்பு எனக்கு கடும் நெருக்கடி

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சவாலான தருணங்களை எதிர் கொண்டனர். ஆனால் அணியை முன்நின்று வழி நடத்திச்செல்லும் பொறுப்பு என்னிடம் முழுமையாக இருந்தது. அதனால் கேப்டன் பொறுப்பு எனக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆதனால் ஒரு முன்னணி வீரராக முழுமையாக செயல்பட முடிவு செயதேன். என இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தி்ல் பார்போடாஸ் டெஸ்ட்டை தான் மிகவும் இருளானதாக கருதுகிறேன். கடந்த 2007 ல் அப்போது பயிற்சியாளராக இருந்த சாப்பல் எனது பேட்டிங் முறை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். என்னுடைய பேட்டிங் குறித்து அவர் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா வீரர்களுக்கும் மோசமான தருணங்கள் வருவது இயற்கை தான். ஆனால் அதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடிய எனக்கு பலனாக 2010ல் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. எனது 24 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் சாப்பலுடைய பயிற்சிகாலத்தையே மிகவும் மோசமானதாக கருதுகிறேன். 

எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது தற்போது அணியில் உள்ள இளம் வீரர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதில் விராத் கோஹ்லி, ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் எனை நேரில் வந்து சந்தித்தனர். விராத் கோஹ்லி எனது கடைசி டெஸ்ட் முடிந்த பின் அவர் அப்பாவின் மாலையை எனக்கு பரிசளித்தார். பின் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என் காலில் விழுந்தார். அதேபோல் ரகானே மிகவும் சோகமாக காணப்பட்டார். தற்போது உள்ள வீரர்களில் தனித்திறமை பெற்ற ரகானே நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்தார். அவரின் ஆட்டத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இதை அவரிடமே நேரில் கூறினேன். ஆனால் அப்போதைய நேரத்தில் அணியில் அவரின் இடம் குறித்த பெரும் குழப்பம் இருந்தது. ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து போராட வேண்டும் என அவருக்கு அறிவுரை கூறினேன். கடைசி போட்டிமற்றொரு இளம் வீரரான ரோகித்ஙசர்மா நீண்ட நாட்கள் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாமல் தடுமாறினார். அவர் எனது கடைசி போட்டிக்காக எனக்கு ஒரு உதவி செய்தார். வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிக்கு முன் என்னுடைய பேட்டில் ஒட்டிய ஸ்டிக்கர் குறித்த தகவல் வெளியாகக்கூடாது என்று அவரது கிட்டை எனக்கு கொடுத்து அதில் என்னுடை பேட்டை வைத்திருக்கும்படி சொன்னார். என் வாழ்வின் முற்பகுதியை நான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டிற்காகவே அர்பணித்தேன். 

சிறந்த பரிசு எது:

இது முழுவதும் எனது மகிழ்ச்சிக்காக செய்ததது. தற்போதுள்ள .பிற்பகுதியை எனது பிடித்தமானர்களுக்கு அர்பணித்து திருப்தி அடைந்து வருகிறேன். அவர்களுக்கு இதைவிட என்னால் வேறு சிறந்த பரிசு எதுவும் தர முடியாது என நம்புகிறேன். தவிர, இந்தியாவின் கிராமங்களில் வளர்ச்சிக்காக கடினமாக தொடர்ந்து பாடுபடுவேன். அதற்கான முழுமுயற்சியையும் மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் வெளிச்சம் ஏற்படுத்துவதே எனது தற்போதைய முதல் இலக்கு. தற்போது அதை நோக்கி தான் நான் பயணித்து வருகிறேன்.இவ்வாறு சச்சின் கூறினார்.
Share it:

Post A Comment:

0 comments: