அரசாங்கத்திடம் நாம் விடுத்த கோரிக்கை நியாயமானதே - ஹசன் அலி

Share it:
ad
தனி நிர்வாக மாவட்டம் குறித்த கோரிக்கையானது நியாயமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து தனியான நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையில் பிழையில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றிடம் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கடந்த காலத்தில் அம்பாறையும் மட்டக்களப்பும் ஒரே மாவட்டமாகவே காணப்பட்டது. 1961ம் ஆண்டு அம்பாறை தனியான மாவட்டமாக பிரிக்கப்பட்டதன் மூல் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமாக மாறியது.

அன்று முதல் இன்று வரையில் புதிய நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் 74 வீதமானவர்கள் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் இதுவரையில் தமிழ் பேசும் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.

சிங்களவர்களே அரசாங்க அதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை முஸ்லிம் ஒருவர் முன்வைத்த காரணத்தினால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக சிலர் பிழையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே காணப்பட்ட விடயத்தை மீள அமுல்படுத்துமாறே எமது கட்சி கோரி நிற்கின்றது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: