தாடி வளர்க்கவேண்டுமா என்றெல்லாம், ஜனாதிபதி நீதிமன்றத்திடம் கேட்க முடியாது - ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

Share it:
ad
அரசியல் தந்திரத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் உச்சநீதிமன்றம் மாறமுடியாது - ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

தமிழில்- GTN

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரினால்  சட்டத்தரணிகள் சங்கத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்காக இரு கேள்விகளை அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்க்கு தனக்கு தகுதியுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு கோரும் இரு கேள்விகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 10 ம்திகதிக்கு முன்னதாக இது குறித்த கருத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

கடிதத்தில்  காணப்படும் இரு கேள்விகளையும் உன்னிப்பாக அவதானித்தால் இது ஒரு அரசியல் ஏமாற்றுவேலை என்பது புலப்படும்.

உச்ச நீதிமன்றம் பின்வரும் இரு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு  தனது கருத்தை தெரிவிக்க மறுக்க வேண்டும்.

அரசமைப்பின்129(1) பிரிவை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது,  நீதிபதிகளின் சுதந்திரம் பேணப்படவேண்டும், பேணப்படுவதாக தோற்றப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும் --  அரசாங்கத்தினலோ அல்லது ஜனாதிபதி அல்லது வேறு எவரோ  முன்னெடுக்கின்ற தந்திரோபாயம் அல்லது திட்டத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்த வேண்டும் என அரசமைப்பு தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் 129(1) கீழ் தீர்ப்பொன்றை வழங்குவதானால் -சட்டமொன்று குறித்தோ அல்லது-பொதுமக்களுக்கு முக்கியமான விடயமொன்று குறித்தோ மாத்திரமே வழங்க முடியும். ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்களில் இவை காணப்படவில்லை. ஜனாதிபதி அர்த்தபூர்வமான எந்த கேள்வியையும், கேட்கவில்லை. நாட்டின் மிக உயரிய நீதிமன்றம் இவ்வாறான வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை.

அரசியல் தந்திரோபாயம்
ஜனாதிபதிக்கு ஆறு வருடங்களுக்கு ஆட்சி புர்pவதற்க்கு ஆணையுள்ளது.எனினும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி அரசியல்ரீதீயான சாதகத்தன்மையை பெறுவதற்காக அந்த ஆணைணை மீற முயல்கிறார்,

இந்த தருணத்தில் தேர்தலை நடத்தினால் தன்னுடன் போட்டியிடுபவாகளை விட தனக்கு சாதகத்தன்மை அதிகம் என அவர் கருதுகின்றார்.

தேர்தலில் ஓரு கட்சிக்கு சாதகமான நிலை உருவாவதற்காக உச்ச நீதிமன்றம் தனது கருத்தினை தெரிவிக்கவேண்டிய தேவையில்லை.

நீதித்துறையின் பணியின் அடிப்படை இயல்பு என்பது பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவதாகும்.

இதன் காரணமாக ஒரு வேட்பாளருக்கு தேவையற்ற சாதகத்தன்மையை வழங்க்கும் விதத்தில் செயற்படுவது உச்ச நீதிமன்றம் ஆற்றும் நீதித்துறை செயற்பாடுகளின் இயல்பிற்க்கு மாறானது.

அரசியல்செயற்பாடுகளும்-நீதிச்செயற்பாடுகளும் வேறு வேறானவை-,எவ்வகையிலும் இவை இரண்டும் சகவாழ்வை காணமுடியாது.

இதன் காரணமாக தொடர்ந்தும் பதவியிலிருப்பதற்கான அரசாங்கத்தினதோ அல்லது ஜனாதிபதியினதோ தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் மாற முடியாது.

இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றால் அது அரசியல் பணியை ஆற்றுவதற்க்கு சமமானதாகிவிடும்.இது நீதித்துறை அமைப்பு என்ற வகையில் உச்சநீதிமன்றத்தை சிதைத்துவிடும்.

அர்த்தமற்றது
சட்ட அடிப்படையிலான அந்தஸ்த்து காணப்படும்போதோ அல்லது பொதுமக்களுக்கு அவசியமானதாக காணப்படும்வேளையில் மாத்திரம் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்க்கு வினாக்களை முன்வைக்கலாம், சமர்ப்பிக்கலாம். தற்போதை சூழலில் அதற்கான தேவைகள் எவையும் எழவில்லை.

ஜனாதிபதிக்கு அவரது பதவிக்காலம் முடிவடைவதற்க்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இவ்வாறு அதிகாரமும் ,மக்கள் ஆணையும் உள்ள ஒருவர் அது தனக்குள்ளதா என கேட்பதற்கான காரணம் எதுவுமில்லை.இவ்வாறான கேள்விகளை எழுப்புவது அர்த்தமற்றது.

ஜனாதிபதி அரசியலமப்பின் 129(1)னை பயன்படுத்தி தான் விரும்பும் கேள்வியை நீதிமன்றத்திற்க்கு சமர்ப்பிக்க முடியாது. உதாரணத்திற்க்கு தான் மருத்துவரிடம் செல்லவேண்டுமா? தாடி வளர்க்கவேண்டுமா என்றெல்லாம் கேட்க முடியாது. தகுதியான கேள்வியென்றால்- ஜனாதிபதி அதற்க்கு அர்த்தம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். ஆணையிருக்கும்போதே ஆணையுள்ளதா என கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.

மேலும் எழுப்பட்ட கேள்வி சட்டம் அல்லது சம்பவம், நிகழ்வு தொடர்பானதாக காணப்படவேண்டும். நோக்கம் தொடர்பான ஜனாதிபதியின் கேள்வி இவற்றிற்க்குள் அடங்காது. ஜனாதிபதியின் நோக்கம் தொடர்பாகவே உச்ச நீதிமன்றத்தின் கருத்து கோரப்பட்டுள்ளது. நோக்கங்களை ஆராயும் அவசியம் உச்ச நீதிமன்றத்திற்கில்லை. ஜனாதிபதிக்கு நோக்கங்கள் இருக்கலாம்,அவர் அதனை மாற்றலாம், இவற்றின் அடிப்படையில் அரசியலைமப்பின் 129(1) பிரிவில் தெரிவித்துள்ள வரையறைக்குள் வராததால்,தங்களால் கருத்துக்கூற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவேண்டும்.
  
மக்களின் விருப்பத்தை உச்சநீதிமன்றம் முறியடிக்கமுடியாது.

மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளதன் மூலமாக ஆறுவருட காலத்திற்க்கு சட்டத்தின் கட்டமைப்பிற்க்குள் அவர் ஆட்சிபுரியவேண்டுமென ததெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அல்லது அவரது பதவிக்காலம் முடிந்தாவோ மாத்திரமே மக்களின் விருப்பு பாதிக்கப்படும்.

இங்கு அவை எதுவும் இடம்பெறவில்லை.இதன் காரணமாக இந்த விடயத்தில் கருத்து தெரிவிப்பது என்பது தேர்தல் மூலமாக மக்கள்தெரிவித்த விருப்பத்திற்க்கு எதிராக செயற்படுவதாக அமையும்.

தற்போது கருத்துகேட்கின்றோம் என்ற போர்வையின் கீழ் தன்னுடைய நோக்கமொன்றிற்கான சட்டபபூர்வ அங்கீகாரத்தை ஜனாதிபதி நீதிமன்றத்திடமிருந்து கோருகின்றார். இந்த நோக்கம் பின்னால் செயலாக மாறலாம்.

உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் அந்த செயலை செய்தால் மக்கள் அந்த நடவடிக்கைக்கு சவால் விடலாம். அவர்களுக்கு அந்ந அதிகாரமுள்ளது.
நீதிமன்றத்தின் ஆலோசனை கேட்கப்படுகின்றது என்ற போர்வையின் கீழ் எதிர்காலத்தில் மக்கள் தனது நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களில் தலையிடுதல்

தேர்தல்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கேயுள்ளது, தேர்தல்கள் உரிய முறையில் இடம்பெற்றனவா?  முடிவுகளுக்கு உரிய முறையில் வந்துள்ளனரா என்பதை அறிவிக்கும் அதிகாரமும் அவரிற்கேயுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் அதற்க்கு கட்டுப்படவேண்டும், அல்லது கட்டுப்படவேண்டும் என்ற தோற்றம் மக்களுக்கு உருவாகும். இதன் அர்த்தம் என்னவென்றால் இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கான தேர்தல் ஆணையாளரின் உரிமை பறிக்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் கருத்து  கட்டுப்படுத்துமா?

ஜனாதிபதி கேட்டுள்ள கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கும் பதில் கட்டுப்படுத்துமா என்பதே இறுதி கேள்வி?

 உச்ச நீதிமன்றம் என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும் ஜனாதிபதி தனது நோக்கத்தை தான் விரும்பியபnடி மாற்றலாம்.இதன் காரணமாக நீதிமன்றத்தின் கருத்து அவரை கட்டுப்படுத்தாது.

இன்னொரு கேள்வியையும் கேட்கலாம்- இது இவ்வாறான பதில  தார்மீக ரீதீயாகவும் அவர்களை கட்டுப்படுத்துமா என்பதே அந்த கேள்வி?

இலங்கையை பொறுத்தவரை தற்போது ஜனாதிபதியால் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட பிரதம நீதியரசரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உள்ளனர்.

ஜனாதிபதியின் அரசியல்நோக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்பொன்றை உச்ச நீதிமன்றம் வழங்கும் என இலங்கையில் எவரும் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே துரதிஸ்டவசமாக எந்த கருத்து வெளியிடப்பபட்டாலும் அது அவர்களை தார்மீக ரீதியில் கட்டுப்படுத்தாது.

உச்ச நீதிமன்றத்தின் கருத்து செய்யகூடிய பணி ஒன்றுதான்- அது இலங்கையின் அரசியலின் வேடிக்கையான இயல்பு குறித்த மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்தும்.இலங்கையின் ஜனநாயம் குறித்த நம்பிக்கையீனங்களை அதிகரிக்கும்.

Share it:

Post A Comment:

0 comments: