ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் இருப்பதாக கூறும் அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் பற்றிய கோப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளையும் மோசடியாளர்களையும் பாதுகாக்க மக்கள் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதில்லை.
ஜனாதிபதி தனக்கு ஆதரவானவர்களின் ஊழல், மோசடிகளை மூடிமறைத்து கொண்டு, அவருடன் முரண்பட்ட பின் அவற்றை வெளியிடப் போவதாக அச்சுறுத்துவது ஒழுக்க கேடானது மாத்திரமல்ல தவறான முன்னுதாரணமாகும் எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து நபர்களின் கோப்புகளும் ஜனாதிபதியிடம் இருக்கலாம் எனவும் இதன் காரணமாகவே அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறாமல் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் தமது கோப்புகள் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இருந்து முதலில் வெளியேறி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: