புகைப்பிடித்தவருக்கு அபராதம் கொடுத்த ரிசப் தயிப் எர்துகான்

Share it:
ad

பொது இடத்தில் புகைப்பிடித்து தன்னிடம் சிக்கிக்கொண்ட நபருக்கு துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துகான் பொலிஸாரை அழைத்து அபராதம் பெற்றுக்; கொடுத்துள்ளார்.

ஸ்தன்பூல் நகரின் பரபரப்பான வீதியில் நடந்த சென்றுகொண்டிருந்த ஜனாதிபதிஇ மேல் மாடியொன்றில் ஒருவர் புகைப்பிடித்துகொண்டிருப்பதை கண்டு, அவரை நோக்கி கையை நீட்டி, 'இதற்காக அபராதத்திற்கு முகம்கொடுக்க வேண்டி வரும்' என்று எச்சரித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரை அழைத்துவரச் செய்த ஜனாதிபதிஇ குறித்த நபருக்கு அபராதம் விதிக்க செய்துள்ளார். துருக்கியில் மதுபான கடைகள்இ உணவகங்கள் உட்பட பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடையாகும். இந்த சம்பவம் குறித்த வீடியோவில், ஜனாதிபதி எர்துகான்இ புகைப்பிடிப்பவரை சுட்டிக்காட்டி தனது உதவியாளர்களிடம் வெறுப்புடன் 'வெட்கக்கேடானது' என்று குறிப்பிடுகிறார்.

'ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி அவர் தொடர்ந்து புகைப்பிடிக்கிறார்' என்று எர்துகான் குறிப்பிடுகிறார். இதில் குறித்த நபர் புகைப்பிடித்துக்கொண்டிருந்த ஹோட்டல் மீதும் 2,680 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதி தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் தலையிடுவதாக சமூக தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. புகைப்பிடிப்பதை கடுமையாக எதிர்க்கும் எர்துகான் தீவிரவாத அச்சுறுத்தலை விடவும் புகைப்பழக்கம் துருக்கிக்கு அபாயமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
Share it:

Post A Comment:

0 comments: