தமது செய்திக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என்று இலங்கையின் முன்னணி சிங்கள விமர்சன செய்தித்தாளான ராயவ அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் ராவய வெளியிட்ட செய்தி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வுப்பிரிவினர் எச்சரித்திருந்தனர்.
எனினும் தமது செய்தியின் நம்பகத்தன்மை, துல்லியம் என்பவற்றில் தாம் உறுதியாக இருப்பதாக ராவய செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரச புலனாய்வுப்பிரிவினர் வழக்கு தாக்கல் செய்வதை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 41 சதவீத வாக்குகளையே பெறுவார் என்றும், மைத்திரிபால சிறிசேன 59 சதவீத வாக்குகளை பெறுவார் என்று அரச புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை அளித்திருப்பதாக ராவய செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொலிஸ் அதிகாரி சந்திரா வாகிஸ்ட பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ராவய செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் வாகிஸ்டவும் தாம் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும், தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை கையளிக்கவில்லை என்றும் மறுப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post A Comment:
0 comments: