அயத்துல்லா அலி கொமேனிக்கு, ஒபாமா ரகசிய கடிதம்

Share it:
ad

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., களை ஒழிக்க ஆதரவு தரும்படி, ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாகக்கூறி, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பிற நாடுகளும் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆசியாவில் உள்ள சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ்., கள் உருவாக்கியுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் பயங்கரவாத செயல்களை நடத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். 

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈரான் நாட்டின் தலைவரான அயத்துல்லா அலி கொமேனிக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு ஈரான் எந்த வகையிலும் அளிக்கும் ஒத்துழைப்பு, அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மற்றும் இதர உலக நாடுகளிடையே ஏற்படும் சுமூக ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஒபாமாவின் இந்த கடிதத்துக்கு அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு எதிராக படைகளை அனுப்பும்படி அந்நாட்டு ராணுவம் அமெரிக்காவை கோரி வரும் நிலையில், அது வெள்ளை மாளிகையின் காதுகளில் விழவே இல்லை என குற்றம் சாட்டியுள்ள குடியரசு கட்சியின் மெக் கெயின், அதை விட்டு விட்டு தற்போது ஈரான் மதத்தலைவருக்கு ஒபாமா கடிதம் எழுதி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 
Share it:

Post A Comment:

0 comments: