ஹக்கீமுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அவரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன் - ஹசன் அலி

Share it:
ad
எனக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தொலைபேசி மூலமாக கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

நேற்று சனிக்கிழமை (முதலாம் திகதி) பாராளுமன்றத்தில் வைத்து ரவூப் ஹக்கீம் என்னிட்டம் கேட்டார் (இன்று ஞாயிற்றுக்கிழமை) அம்பாறையில் நடைபெறவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று..! இதற்கு நான் இல்லையென்று பதில் கூறினேன்.

கொழும்பிலுள்ள என்னுடைய வீட்டுக்கு எனது உறவினர்கள் வந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து எனது பிள்ளைகள் மருமக்கள் வந்துள்ளனர். அவர்களுடன் நான் இருக்கிறேன். அதனால்தான் அம்பாறையில் நடைபெறும் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதைத்தவிர ஹக்கீமுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் உறுதியாக..!

அதேவேளை வரவுசெலவு வாக்களிப்பில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்தும், ஜாதிக்கஹெல உறுமய வாக்களிப்பில் கலந்துகொள்ளாததை ஒப்பிட்டும் ''உங்களுக்கு முதுகெலும்பு இல்லைதானே...'' என ஹசன் அலியிடம் ஜப்னா முஸ்லிம் இணையம் வினா தொடுத்தபோது, 

ஹெல உறுமயவுக்கு அரசாங்கத்துடன் உள்ள பிரச்சினை வேறு, அதற்காகவே அவர்கள் அரசாங்கத்துடன் பிரச்சினைபடுகிறார்கள். அதனை தற்போது எனது தொலைபேசி மூலமாக கூறமுடியாது. வேறு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன் என தெரிவித்த ஹசன் அலி, ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் அரசாங்கத்திற்குள் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. உரியவேளையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது தீர்மானத்ததை அறிவிக்கும் என்றார்..?
Share it:

Post A Comment:

0 comments: