இலங்கையின் பௌத்த சக்திகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்கால தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அனைவரும் காண முடியும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 28-11-2014 பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரத்ன தேரர், எந்த அமைப்பு யாரை ஆதரித்தாலும் இலங்கை பௌத்த சமூகம் தமது அமைப்புடன் அணிதிரளும் என குறிப்பிட்டுள்ளார்.
சமூக பொருளாதார பிரச்சினை சம்பந்தமாக பௌத்தர்களின் எழுச்சியாது நாட்டில் வரலாற்றில் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பௌத்த சமூகம் இந்த காரணத்தின் அடிப்படையில் முன்னோக்கி வருவதை காணமுடியும்.
பொதுபல சேனா போன்ற அமைப்புகள் தாம் விரும்பு நபருக்கு ஆதரவை வழங்கும் உரிமையுள்ளது. இதனால், அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது அந்தளவுக்கு சிக்கலானதல்ல.
அதேவேளை ஜாதிக ஹெல உறுய அடுத்த சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள உள்ளது.
குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் சுதந்திரம் போன்ற விடயங்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எமது தேவை. அது பற்றி அடுத்த சில நாட்களின் அறிய தருவோம் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: