59 சதவீத வாக்குகளை, மைத்திரிபால பெறுவார் என்பதை மறுக்கிறது சுதந்திர கட்சி

Share it:
ad
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் வாக்கு வீதமானது நூற்றுக்கு 59 சதவீதமென அரச புலனாய்வுப் பிரிவு தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொது எதிர்க்கட்சி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

எனினும், புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையை தயாரிப்பவர்கள் அல்லவென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மைத்திரபால சிரிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு  நூற்றுக்கு 59 சதவீத வாக்கு இருப்பதாக இராணுவ புலனாய்வு எமக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதனிடையே, புலனாய்வு பிரிவு அறிக்கை தயாரிக்கவில்லை என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை தயாரிப்பவர்கள் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: