எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல், தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர்

Share it:
ad
அபூபக்கர் றமீஸ்
சிரேஷ்ட விரிவுரையாளர் (சமூகவியல்)
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

மலரும் புதிய ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜனவரி மாதமளவில் இலங்கை வரவிருந்த போப்பாண்டவரின் வருகையும் இடம்பெறாதுபோல் தெரிகிறது. தேர்தல் அறிவிப்புச் செய்யப்படுவதற்கு முன்னரே ஆளும் - எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மக்களும் உசர் நிலையடைந்துள்ளனர். ஒரு புறம் மூன்றாவது தவணைக்கான கனவுகளுடன் தற்போதய ஜனாதிபதி ம ஹிந்த ராஜபக்சவும் மறு புறம் ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவலுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகின்றது. 

இத்தனைக்குள்ளும் கூட்டணி அமைத்துக் கொள்வது, பொது வேட்பாளரை நிறுத்துவது, நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பது, அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவது போன்ற வாதங்கள் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளன. ஒருசாரார் தற்போதய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் அவசரமாகத் தேர்தல் ஒன்றினை நடத்துவதறக்கான அவசியம்தான் என்ன என்று கேட்க, இன்னுமொரு பகுதியினர் மூன்றாவது தவணைக்கு போட்டியிடுவதற்கான சட்டரீதியான உரிமை தற்போதய ஜனாதிபதிக்கு இல்லை என்ற சூடான விவாதங்களைத் தொடங்கியுள்ளனர். இவ்வழியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் பதிவுகளில் புதிய அத்தியாத்தினை திறக்கவிருக்கின்றது.    

ஊவாவில் அரசுக்கு பின்னடைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான களத்தினை சூடேற்றியிருக்கும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தல்களில் ஆளும் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட பெருவாரியான வாக்குகளுடன் ஒப்பிடும் போது இவ்வெற்றி குறிப்பிடும்படியானதாக இல்லை. அரசாங்கக் கட்சியின் பாரிய பின்னடைவுகளுடனே இவ்வெற்றி சாத்தியமாகியுள்ளது என்கின்றனர் நோக்கர்கள். 

குறித்த தேர்தலில் ஆளும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் 21மூ சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் இக்கூட்டமைப்பு அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 72மூ தமதாக்கிக் கொண்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த காலத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட அதிகப்படியான வாக்குவிகிதாசாரமாகவும் இதனைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஊவாத் தேர்தலில் 51% வாக்குகளை மட்டுமே அக் கூட்டமைப்பினால் பெறமுடிந்திருக்கின்றது. இவ்விழப்பீடு கடந்த மாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றிருந்த அதிகப்படியான ஆசனங்களில் 6 இனை கைநளுவச் செய்துள்ளது.   

2009 தேர்தலுடன் ஒப்பிடும் போது பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களைக் கொண்ட மொனராகலையிலும் (95மூ) பதுளையிலும் (73மூ)  அளும் கூட்டமைப்பு இம்முறைத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் முறையே 20.4மூ, 23மூ வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வீழ்ச்சி சிங்கள பௌத்த மக்களின் ஆதரவினை மட்டும் கொண்ட ஒரு ஆட்சியினை நிறுவுவதற்கான ஆளும் கட்சியின் அரசியல் சூட்சமங்களைத் தகர்த்துள்ளது. 

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான காலத்தினை மேலும் தாழ்த்துவது ஆளும் கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் இருப்பினை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற அபாய அறிவிப்பினையும் ஊவாத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

உண்மையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற அரசின் தீர்மானம் முன்கூட்டியே எடுக்கப்பட்டதாயினும் ஊவாவில் அரசாங்கக் கட்சிக்குக் கிடைத்த பெறுபேறுகள் அதன் அவசியப்பாட்டினை துரிதப்படுத்தியுள்ளது.     

மறுபுறம் வீழ்ச்சியின் விழும்பில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் புத்தெழுச்சியினைக் கொடுத்துள்ளது. விரும்பியோ விரும்பாமலோ அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலின் தலைமையின் கீழ் மீழ் ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.  

குறிப்பாக 2009இல் விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பிரதான எதிர்கட்சியான ஐக்கியக் தேசியக் கட்சி (ருNP) மிகப்பெரும் வீழ்ச்சியினைச் சந்தித்துள்ள நிலையில் அண்மைய ஊவாத் தேர்தல் அக் கட்சிக்கு நம்பிக்கையூட்டும்படியான பெறுபேறுகளைத் தந்துள்ளன. 2009 ஆம் ஆண்டைய ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது 22.32மூ இருந்த அதன் வாக்கு விகிதாசாரம் இம்முறை 40.24மூ அதிகரித்துள்ளது.  

ஊவாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் இச் சடுதியான அதிகரிப்புக்கு அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹரின் பெர்னான்டோவின் அரசியல் வசீகரத்துவம், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஒன்றிணைப்பதில் அண்மையில் அக்கட்சி அடைந்துகொண்ட தற்காலிக வெற்றி போன்ற அகநிலைக் காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன எனக் கூறப்பட்டாலும், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி என்ற புறநிலைக் காரணியின் தாக்கத்தினை குறைந்து மதிப்பிடமுடியாது. 

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்களைக் கடந்துள்ள போதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவினைக் குறைத்து அவர்களது வருமான மட்டத்தினை அதிகரிப்பதில் அரசு அக்கறையற்று உள்ளது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. பொருட்களுக்கான விலையேற்றம், தவறான பொருளாதாரக் கொள்கை, குடும்ப ஆட்சி, ஊழல், சட்ட ஒழுங்கில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு என்பன அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியின்மையினைத் தீவிரப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியியலாளர்கள் என சமூகத்தின் சகல பகுதியினரும் எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றுவதில் அரசு தோல்வி கண்டுள்ளது.   

இத்தகையதொரு புறச்சூழலில் மக்களின் அபிப்பிராயத்தினை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான தேவை ஆளும் தரப்புக்கு உண்டு. அதன் மூலமே எதிர்கால அரசியல் இருப்பினை உறுதிப்படுத்தி தமது நீண்டகால வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அத்தரப்புக் கருதுகின்றது. அதேவேளை ஊவாத் தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவலுடன் புதிள களங்கள் திறக்கப்பட்டிருப்பதனைக் கண்டு எதிர்க் கட்சிகள் உசார்நிலையினை அடைந்துள்ளன.            

சிறுபான்மையினர் வாக்குகள் 

இலங்கை மக்களில் சுமார் 11 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவதற்கு 50மூ அதிகமான வாக்குகளைப் பெறவேண்டும். வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தபட்சம் 55 இலட்சம் வாக்குகளைப் பெறுவதன் மூலமே ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தனது வெற்றி வாய்ப்பினை உறுதிசெய்ய முடியும். 

இன ரீதியாக வாக்காளர்கள் தொகையினைப் பகுப்பாய்வு செய்யும் போது இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள 74மூ  சிங்கள பௌத்தர்களிடம் 80 இலட்சம் வாக்குகள் உள்ளன. 26மூ உள்ள சிறுபான்மை மக்கள் 30 இலட்சம் வாக்குகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தவிர்த்து பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாக வர எதிர்பார்க்கும் ஒருவா 65மூ இற்கு மேற்பட்ட பெரும்பான்மை சிங்கள இன மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும். இது சிலவேளைகளில் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலைப் பொறுத்தவரையில் 95மூ அதிகப்படியான பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்காளர்களை கொண்ட மொனராகலை மாவட்டத்தில் ஆளும் கட்சி 58.34மூ வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று ஜனாதிபதியாகுவது என்ற வாதத்திற்கு இடமில்லாமல் போகின்றது.  

எனவேதான் எதிர்வரும் தேர்தலில் யராயினும் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு விரும்பியோ விரும்பாமலோ சிறுபான்மை மக்களின் ஆதரவினைப் பெறவேண்டியுள்ளது. இது தொடர்பில் சிறுபான்மையின வாக்காளர்களிடம் புரிதல் இருக்கின்றதோ இல்லையோ, பேரினவாத ஆளும் - எதிர்க் கட்சிகள் அதனை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. 

இது விடயத்தில் கவனம் செலுத்தத்தக்க பிறிதொரு விடயம் சிறுபான்மைக் கட்சிகள் பற்றியதாகும். அவ்வகையில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தத்தக்க பல கட்சிகள் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளன. அவற்றுள் சில ஆளும் கூட்டமைப்பின் பங்களிக் கட்சிகளாக இருக்க, வேறு சில எதிர் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. 

குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்கள் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தேசிய காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளும் மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யத்தக்கதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும்  அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளன. அதிகப்படியான சிறுபான்மை தமிழ் வாக்காளர்களின் ஆதரவினைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு  எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.     

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதித்துவம் செய்யும் பெருவாரியான தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாக்குகள் ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிரானதாகவே இருக்கும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது, வட மாகாண சபையின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அரசு இடைஞ்சல் செய்வது தொடர்பாக முன்வைக்கப்படும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள், யுத்தம் முடிவுற்ற நிலையிலும் தொடரும் இராணுவமயமாக்கமும் அதனோடு இணைந்த காணிச் சுவீகரிப்பு மற்றும் மீழ்குடியேற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், காணமல்போனோர் தொடர்பான அரசின் நம்பகரமற்ற விசாரணைப் பொறிமுறை, வடக்கு கிழக்கில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எழுந்திருக்கும் சவால்கள்; போன்ற காரணிகள் வடக்கு - கிழக்குத் தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு நடத்தையில் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தக் கூடும். 

அரசாங்கம் தொடர்பில் எதிர்மறையான அபிப்பிராயம் பெருவாரியான தமிழ் வாக்காளர்களிடம் நிலவுவதனால் 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கக் கட்சி வேட்பாளரை எதிர்த்து எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரித்தது போன்றதொரு நிலைப்பாட்டினை இம்முறைய தேர்தலில் அவர்கள் எடுக்கக் கூடும். கடந்த வட மாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்கம் பாரிய தோல்வியினைச் சந்தித்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 85மூ வாக்குகளைப் பெற்று மிகப்பெரும் வெற்றியினை உறுதிசெய்தமை மேற்படி எடுகோளினை உறுதிப்படுத்துகின்றது.  

அதேவேளை கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை நோக்கும் போது வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் தமது மரபுத்துவ கட்சிகள் சார்ந்து நிற்கும் வேட்பாளர்களை ஆதரிக்கும் ஒரு வழக்கத்தினை கொண்டிருக்கின்றனர். எனினும் மிக அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்காளர்களின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளும் அதனைத் தடுப்பதில் அரசாங்கத்தின் பங்களிகளான முஸ்லிம்கள் கட்சிகள் அடைந்துள்ள தோல்வியும் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது மிகுந்த அதிருப்தியினை உருவாக்கியுள்ளது. 

அரச இயந்திரத்தின் ஆசியுடனே முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்ற கருத்து முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ள நிலையில் அரசு சார்பான ஒரு வேட்பாளரை தமது கட்சிகள் ஆதரிக்கக் கோரினால் கூட முஸ்லிம் வாக்காளர்கள் அவ்வேட்பாளரை ஆதரிப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகின்றது. இந்த அச்சத்தின் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை எடுப்பதில் முஸ்லிம் கட்சிகள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனாலேயே என்னவே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாணத்தில் முகாமிட்டு தமது பிரச்சாரப் பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர்.         
மரபுரீதியாக வடக்கு கிழக்குக் வெளியில் உள்ள பெருவாரியான முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதாரவாளர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2005இற்குப் பின்னரான தேர்தல்களில் குறிப்பிட்ட தொகை வாக்காளர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை ஆதரித்து இருந்த போதிலும் மிக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தென், மேல், வட-மேல், ஊவா மாகாண சபைக்கான தேர்தல்களில் பெருவாரியான முஸ்லிம் மக்கள் அரசாங்கக் கட்சியினை ஆதரிக்கவில்லை. பௌத்த கடும்போக்குவாதத்தின் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்றவகையில் அரசுக்கு எதிர்ப்பினைக் காட்டுவதில் அவர்கள் முன்நிற்கக் கூடும். 

அரச ஆதரவுடனான முஸ்லிம் கட்சிகளை ஆதரிப்பதில் கூட வடக்குக் கிழக்குக் வெளியில் உள்ள முஸ்லிம்கள் தயக்கம் காட்டும் ஒரு நிலை உள்ளது. கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிpரசும்; இணைந்து ஒரு கூட்டமைப்பாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம் வாக்காளர்களை ஒன்றுதிரட்ட முயற்சித்த போதிலுமலும் அம்முயற்சி படுதோல்வியிலேயே முடிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட குறைந்த வாக்குகளையே முஸ்லிம் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. 

இப்பின்னணியில், அரசோடு ஒட்டியிருக்கும் கட்சிகள் எவ்வகையான முடிவுகளை எடுப்பினும், பெரும்பாலான முஸ்லிம்களின் வாக்குகள் ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு (தற்போதைய ஜனாதிபதி) எதிராகவே செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. இருப்பினும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசில் அங்கம் வகிக்கும் பிராந்திய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சார்புவாக்குகள் தற்போதைய ஜனாதிபதிக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் அத்தொகை வெற்றியினை உறுதிசெய்யத்தக்க பெரும்பான்மையினை தற்போதய ஜனாதிபதிக்குப் பெற்றுக்கொடுக்குமா என்பது கேள்விக்கிடமானது.  

அதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்திருப்பதனால், அம்மக்களின் பெரும்பாலான வாக்குகள் தற்போதைய ஜனாதிபதிக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் சுமார் 60,000 – 70,000 மலையக மக்களின் வாக்குகள் ஆளும் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாக்குகளே ஆளும் தரப்பின் வெற்றியினையும் உறுதிசெய்தது. இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல் பிரதேச அரசியல்வாதிகளுக்கிடையிலான தேர்தல் அன்று. அது தேசிய தலைவர்களோடு தொடர்புபட்டது என்பதனால் மலையக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் (2010) தேர்தலில் நுவரெலியாவில் 18மூ உள்ள மலையக மக்களின் வாக்குகளில் 52மூ வாக்குகள் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் 43மூ வாக்குகள் தற்போதைய ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டது. ஆதலால், இம்மக்களின் வாக்குகள் இரு வேட்பாளர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. 

இந்நிலையில் ஒன்றுபட்ட ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டுக்களுடன் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆதரவினையும் பெற்று வலுவான கூட்டணி ஒன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துமிடத்து தற்போதய ஜனாதிபதியின் வெற்றி வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பதில் ஐயமில்லை. எனினும் மேற்குறிப்பிட்ட கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கு பரந்த விட்டுக்கொடுப்புக்களும் உடன்பாடுகளும் அவசியமாகின்றன. 

உத்தேச கூட்டமைப்பு 40% சிங்கள வாக்குகளுடன் 10ம% சிறுபான்மை வாக்குகளை ஒன்றிரட்டுமிடத்து வெற்றியினை உறுதி செய்துகொள்ள முடியும். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் உள்ளக நெருக்கடிகள், தனியாக போட்டியிடுவதற்கான அல்லது தேர்தலை பகிஷ்கரிப்புச் செய்வதற்கான மக்கள் விடுதலை முன்னணியின் தீர்மானமிக்க முடிவு, மக்களுக்கு பெருவாரியான சலுகைகளை அள்ளிவழங்குவதற்கு தற்போதய அரசாங்கம் எடுக்கும் பிரயத்தனங்கள் என்பன எதிரணி வேட்பாளரின் வெற்றியினைத் தடுத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதியினை தீர்மானிப்பவர்கள் சிறுபான்மையினர்களே.  

Share it:

Post A Comment:

0 comments: