(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்போம் -எமது உரிமைகளை காத்திடுவோம் எனும் தொனிப்பொருளில் 25-10-2014 இன்று சனிக்கிழமை விஷேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் லெஸ்லி தேவேந்திரா, ஜனாதிபதியின் தொழில் சங்க இணைப்புச் செயலாளர் என்.வி. கல்கட்டி,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல் சமன் குமார், அரச கூட்டுத்தாபன தனியார் வியாபாரிகள் சங்க செயலாளர் றஞ்சித் ஹெட்டியாராட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர புகையிரத ஊழியர் சங்க பிரதம செயலாளர் நதிரா மனோச்,ஸ்ரீலங்கா சுகாதார ஊழியர் சங்க பிரதம செயலாளர் ரோஜ் டிமெல ,மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம். ஜீவானந்தம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், உட்பட மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் இன மத பிரதேச வேறுபாடுகள் இன்றி செயற்பட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எல்லோரும் ஆதரிப்பது எமது கடமையாகும் என தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: