நீண்ட காலமாக அம்பாறை காணிப்பதிவகத்தில் கடமையாற்றி வந்த மேலதிக காணிப் பதிவாளர் எம்.ஏ.எம். இஸ்மாயில் 2015.01.01 யிலிருந்து அமுலுக்கு வரும் வண்ணம் கல்முனை காணிப்பதிவதிகத்திற்கு காணிப்பதிவாளராக இடமாற்றப்பட்டுள்ளார். 2009 ம் ஆண்டின் திணைக்கள சுற்று நிருபத்திற்கு அமைவாக 5 வருடங்களுக்கு மேல் ஓர் நிலையத்தில் சேவையாற்றி வரும் அரச ஊழியர்களை வேறு நிலையங்களுக்கு இடமாற்றுவது வழமையாகும்.
இவர் கல்முனைக் காணிப்பதிவகத்திற்கு காணிப்பதிவாளராகச் செல்லும் அதே வேளை, கல்முனை காணிப்பதிவகத்தில் பதில் காணிப்பதிவாளராகக் கடந்த 7 வருடங்களாகக் கடமையாற்றி வந்த எம்.ஏ.ஜமால் முஹம்மத் அம்பாறை காணிப் பதிவகத்திற்கு இடம் மாற்றப் பட்டுள்ளார். அம்பாறை காணிப்பதிவகத்தில் Mr. H.D.D. Sanjeewa தரம் II காணிப்பதிவாளராக ஏற்கனவே கடமையாற்றி வருவதனால் எம்.ஏ.ஜமால் முஹம்மத் அங்கு மேலதிக காணிப்பதிவாளராகக் கடமையாற்றுவார்.
இவ் இடமாற்றத்திற்கான கடிதங்கள் 2014.10.09 திகதியிடப்பட்டு பதிவாளர் நாயகத்தினால் உரிய உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்படுள்ளது. மிக நீண்ட காலத்தின் பின்னர் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஓர் இடமாற்றம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் :
1. MIM. Razeen
2. AM. Rakeeb


.jpg)
Post A Comment:
0 comments: