மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள கோழிப்பண்ணை

Share it:
ad
கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி  கிராமிய கைத்தொழில் மீன்பிடி அமைச்சினால் உற்பத்தியை  அதிகரிக்கும் நோக்கில்  பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன  இதற்கேற்ப கேற்ப அண்மையில் மாகாண மட்டத்தில்  சிறந்த கால்நடை மற்றும் பண்ணை உற்பத்தியாளர்களை தெரிவு செய்வதற்காக  போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன  ,அவ்வாறு நடைபெற்ற போட்டிகளில் கால்நடை   வளர்ப்பு பிரிவில் அம்பாறை மாவட்டத்தில்  நிந்தவூரைச் சேர்ந்த மீராலெப்பை சம்சுன்அலி  அவர்களது “அமான்ஸ்” எனப்படும் கோழிப்பண்ணை முதலிடத்தப்பெற்றிருக்கின்றது.

மாவட்டத்தின்  இருபத்துநான்கு கிராமங்களைச்சேர்ந்த அனைத்து பண்ணைகளும்  இப்போட்டியில் கலந்து கொண்டன,இம்மாதம் 9,10,11ஆம் திகதிகளில்    சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில்    இத்துறையின் நுட்பங்களை பிரதிபலிக்கும் வகையான கண்காட்சி  ஒன்றும்  நடைபெற்றது,இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு தமது   பண்ணை பற்றிய அறிவினை மேம்படுத்திக்கொள்ள  உறுதுணையாக இருந்தது.

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் சமாதான கிராமத்தை அண்மித்து அமைந்துள்ள அமான்ஸ் கோழிப்பண்ணை  ஒன்றரை  ஏக்கர்  பரப்பளவில் அமைந்துள்ளது,நன்கு திட்டமிட்டு நவீன வசதிகளை கொண்டதாக அமைக்கப்படுள்ளது இங்கு மூவாயிரத்து  ஐநூறு முட்டைகோழிகள் உள்ளன ,தினமும் மூவாயிரம் முட்டைகள்  பெறப்படுகின்றன.பன்னையைச்சுற்றி  நல்ல சுவாத்தியத்தை  பேணுவதற்காக  பயன்தரும் மரங்கலும், தரையில் புல்லும்  நடப்பட்டு குளிர்ச்சியான ஒரு  சூழலில் இப்பண்ணை அமைந்திருக்கின்றது.

இம்மாதம் பதினோராம் திகதி சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது  மேற்படி அமைச்சின் செயலாளர்  கே பத்மநாதன் அவர்களால் இவரது முயற்சியைப்பாராட்டி  ரூபா பதினைந்தாயிரம் பணப்பரிசும்   சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர்  மாவட்டத்தில் கைத்தொழில் கால்நடை மீன்பிடித்துறையை முன்னேற்றுவதில் மிகவும் ஈடுபாடுடன்  உள்ளது அண்மைக்காலமாக அந்த அமைச்சின் செயல்பாடுகளினூடாக புலனாகின்றது.

கிராமிய மக்கள் இந்த வாய்ப்பினைப்பயன்படுத்திக்கொண்டு  தாமும் நலனடைந்து  சமூகத்தின் பொருளாதரத்தையும்  வளர்க்கவும்  இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக உள்ளதால்  ,இதனை நன்கு பயன்படுத்தவேண்டும்.



Share it:

Post A Comment:

0 comments: