மன்னார் முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கு, அதிபர் விண்ணப்பங்கள் கோரப்படுமா..?

Share it:
ad
முசலியூர் (கே.சி.எம்.அஸ்ஹர்) 

தேசிய பாடசாலைகளுக்கு கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த தரம்-02,தரம்-03 அதிபர் சேவையைச் சேர்ந்த 01 ஐ சேர்ந்தோர் மாத்திரமே நியமிக்கப்பட வேண்டுமென சுற்று நிருபங்கள் கூறுகின்றன. இப்பாடசாலையின் அபிவிருத்தி அதிபர்களின் வாண்மை விருத்தியிலே தங்கியுள்ளது. வடமாகாணத்தில் இருந்து புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கான தகுதியான அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. பொதுச் சேவை ஆணைக்குழுவால் கடந்த ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை தினகரன் பத்திரிகையில் இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் வடமாகாண முஸ்லிம் தேசிய பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்-சென்ட் சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை(96) , மன்-சென்ட்; சேவியர் பெண்கள் தேசிய பாடசாலை (97) ,வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வவுனியா ரம்பைக்குளம் தேசிய பாடசாலை (98) போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மன்-அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை , மன்- முசலி தேசிய பாடசாலை என்பவற்றிக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரையும் , வட மாகாண ஆளுனரையும்  மன்னார் மாவட்ட முஸ்லிம் புத்திஐPவிகள் கோரியுள்ளனர்.  
 

Share it:

Post A Comment:

0 comments: